மயிலாடுதுறை டாஸ்மாக்கில் பெரிய அதிர்ச்சி.. ரூ.53,930 தொகை இடிக்குதே? 17 கடை ஊழியர்களுக்கும் நோட்டீஸ்
மயிலாடுதுறை: நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாகவும், ஊழியர்கள் கூட்டு சேர்ந்து அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்து விட்டு, கூடுதல் தொகையை தங்களுக்குள் பங்கிட்டு கொள்வதாகவும் புகார்கள் வலம் வந்தன. இதையெல்லாம் தடுக்கவே ஒவ்வொரு பாட்டிலிலும், கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்யப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகம் வசூலிக்கக்கூடாது என்ற முறை கொண்டுவரப்பட்டது. ஆனால், இப்போது இதிலும் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது.. இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைத்து வருவதாகவும், அதாவது மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக், மதுக்கடைகள் மூலம் அரசுக்கு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

எனினும், MRP எனப்படும் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேலாக மதுபாட்டில்கள் ஆங்காங்கே விற்கப்படுகின்றன.. குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.50 வரை கூடுதலாகவும் வசூலிக்கிறார்கள்.
கியூ ஆர் கோடு விற்பனை
இதுபோன்று விற்பதை தடுக்கவும், தவறுகள் நடக்காமல் வெளிப்படையாக விற்பனை செய்யவும் அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவேதான், கியூ ஆர் குறியீடு ஸ்கேன் செய்து, அதன்மூலம் பணம் செலுத்தி மதுபானங்களுக்கான பில்லை பெறும் வசதியை டாஸ்மாக் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. மேலும், அனைத்து கடைகளுக்கும் கையடக்க வடிவில் விற்பனை முனைய கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், ரொக்கப்பணம், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, கியூஆர் குறியீட்டை, ஸ்கேன் செய்தும் குடிமகன்கள் பணம் வழங்கலாம். மேற்கண்ட எந்த முறையில் பணம் வசூலித்தாலும், அதை ஊழியர்கள் கருவியில் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வசூலில் வித்தியாசம்?
அதுமட்டுமல்ல, ஊழியர்கள் வங்கியில் செலுத்திய பணமும், கருவியில் உள்ள விற்பனை விபரங்களும் ஒரே மாதிரியாக உள்ளதா? வித்தியாசம் உள்ளதா? என்றெல்லாம் கண்காணிக்க, மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒருவேளை ஏதாவது குறைபாடு, வித்தியாசம் தென்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், 2 சதவீத மாத வட்டியுடன், 50 சதவீத அபராதம் வசூலிக்குமாறும் மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, அனைத்து கடைகளிலும் மாவட்ட மேலாளர்கள் தங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளார்கள்.. அந்தவகையில், , நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் சிலர் சிக்கியிருக்கிறார்கள்..
மயிலாடுதுறை, நாகை
கீழ்வேளூர், குத்தாலம், மயிலாடுதுறை, நாகை, சீர்காழி, தரங்கம்பாடி, திருக்குவளை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் செயல்படும் 17 மதுக்கடைகளில், 10 முதல், 53,930 ரூபாய் வரை வேறுபாடு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்களாம்.
இதையடுத்து, அந்த கடைகளில் பணிபுரியும் சூப்பர்வைசர்கள், ஊழியர்கள் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.. மேலும், இது தொடர்பாக 3 நாட்களுக்குள் விளக்கம் தர
வேண்டும் என்றும் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிர்வாகம் வார்னிங்
முன்னதாக, டாஸ்மாக் மதுப்பான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடையில் பணியாற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்திருந்தது..
அதேபோல, டாஸ்மாக் கடையில் கூடுதல் தொகை வசூலிக்கும் விவகாரத்தில் அனைத்து ஊழியர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதற்கு முகாந்திரம் இருந்தால், அனைத்து ஊழியர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டு இருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications