திருச்சியில் டாஸ்மாக் கடை சூறையாடல்: 6 நாம் தமிழர் கட்சியினர் கைது
திருச்சி: திருச்சியில் டாஸ்மாக் கடையை நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் அடித்து நொறுக்கி சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடையை சேதப்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மறைந்த தலைவர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இன்று இனிப்பு வழங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபானக் கடைக்குள் திடீரென நுழைந்த தொண்டர்கள், அங்கிருந்த பணியாளர்களை விரட்டிவிட்டுவிட்டு, தங்கள் கைகளில் பிடித்திருந்த கொடிக் கம்புகளால், ஷோகேசில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்களை அடித்து நொறுக்கினர்.

அதோடு டாஸ்மாக் கடைக்கு எதிராக முழக்கமிட்டமாறே, மதுபாட்டில்கள் அடுக்கப்பட்டிருந்த பெட்டிகளை கடைக்கு வெளியே தூக்கி போட்டு உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பல்லாயிரக்கணக்கான மதுபாட்டிகள் உடைந்து வீணானது.
டாஸ்மாக் கடையை அடித்து உடைத்த கையோடு மதுபான கடையை மூடக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீஸார், இந்த சம்பவத்திற்கு காரணமான நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட துணை செயலாளர் பிரேம் ஆனந்த், முனியப்பன், கோபி, சரவணன், விஜய், சிவா உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications