சென்னை தி.நகரில் டாஸ்மாக் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு- ஒருவர் படுகாயம்!
சென்னை: சென்னை தியாகராயர் நகரில் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு இன்று மாலை மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பி ஓடினர். இதில் டாஸ்மாக் ஊழியர் பழனி என்பவர் படுகாயமடைந்தார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் மதுக்கடைகள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டும் வருகின்றன.

சேலத்தில் மதுக்கடை ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் ஊழியர் ஒருவர் பலியான சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் சென்னையின் மையப்பகுதியான மக்கள் அதிகமாக கூடும் தியாகராயர் நகர் தெற்கு போக் சாலையில் மதுக் கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 4 மணியளவில் மதுபானக் கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் பெட்ரோலை ஊற்றி தீ பற்ற வைத்துவிட்டு தப்பி ஓடியிருக்கிறார். இதில் டாஸ்மாக் கடை ஊழியர் பழனி என்பவர் படுகாயமடைந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்தததும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை விரைந்து அணைத்தனர். மதுவிலக்கை வலியுறுத்தும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தீ வைத்தார்களா? அல்லது பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான தகராறில் தீ வைக்கப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications