இடுப்பளவு நீரில் நீந்தி டாஸ்மாக்குக்குப் போன 'குடிவெறியர்கள்'.... வெள்ளத்துக்கு நடுவே 'ஜோர்' விற்பனை
சென்னை: விடாமல் கொட்டிய அடைமழைக்கு சென்னை முழுவதும் வெள்ளக்காடாகியதால் அத்தியாவசிய பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகள் மட்டும் தட்டுப்பாடின்றி செயல்பட்டு வருகிறது. தனியார் நிறுவனத்துக்கு விடுமுறை தந்தும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்பதுதான் வேதனை. கழுத்து உயர தண்ணியில் நீந்தி வந்தாவது கடைகளை திறப்போம் என்று பணி செய்தனர் டாஸ்மாக் ஊழியர்கள்.
வெள்ளக்காடான சென்னையில் பால், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் மட்டும் தட்டுப்பாடின்றி மது விற்பனை நடப்பது வேதனை தெரிவித்துள்ளனர் சமூகவலைத்தளவாசிகள். டுவிட்டரில் டாஸ்மாக் என்ற ஹேஸ்டேக் போட்டு டிரெண்ட் செய்தனர்.

பரிதவிக்கும் மக்கள்
சென்னை நகரமே வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கிறது. பல லட்ச மக்கள் உண்ண உணவின்றி, குடிக்க தண்ணீர் இன்றி, உடுத்த உடைகள் இல்லாமல்,வீடுகளை இழந்து எங்கே போய் தங்குவது என செய்வதறியாது சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
|
டாஸ்மாக் கடையில் குடிமகன்
மக்கள் அடிப்படை தேவைகளுக்காக தவிக்கும் இந்த நேரத்திலும் இடுப்பு அளவு தண்ணீரையும் பொருட்படுத்தாமல் குடிமகன்கள் டாஸ்மாக்கை நாடிச் செல்கின்றனர். மக்களை மீட்க வாகனம் வரமுடியாத நிலையில் டாஸ்மாக்கிற்கு மட்டும் எப்படி சரக்கு கொண்டு வரப்படுகிறது? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

டாஸ்மாக் கடைக்கு இழப்பு
சபரிமலை சீசன், நவம்பர் 17ம் தேதி துவங்கியதை அடுத்து, மது விற்பனை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த, 14 நாட்களில், மது விற்பனையில், 25 சதவீதம் சரிவு ஏற்பட்டுஉள்ளது. மது விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவால், இந்த இரு வாரத்தில் மட்டும், டாஸ்மாக் நிறுவனத்துக்கு, 225 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.மேலும், தீபாவளியை ஒட்டி கொட்டித் தீர்த்த மழையால், பீர் விற்பனை, 25 சதவீதம் குறைந்து, 100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
|
மழையால் சரிவு
மழை தொடர்வதால், அன்றாட தொழில்களுக்கு பாதிப்புக்கு ஏற்பட்டு, மது விற்பனையும் சரிந்து வருகிறது. எனவே, மது விற்பனையில், நடப்பாண்டின் இலக்கை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். மதுவிற்பனை சரிந்துள்ளதால் அடாத மழையிலும் இலக்கை எட்ட விடாமல் கடையை திறந்து வைத்து காத்திருக்கின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications