சேலத்தில் டாஸ்மாக் ஊழியர் அடித்துக் கொலை: விற்பனை பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்
சேலம்: சேலத்தில் டாஸ்மாக் கடை ஊழியரை அடித்துக் கொன்று விற்பனை பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் அரியனூரை அடுத்து உள்ள சின்ன சீரகாபாடியில் இருக்கும் மேலத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் குமார்(37). மல்லூரில் இருக்கும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி பூங்கொடி. அவர்களுக்கு சசிரேகா என்ற மகளும், ராஜேஷ் கண்ணா என்ற மகனும் உள்ளனர்.
குமார் கடந்த சனிக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை கே.பி. வலசு அருகே சென்றபோது அவருக்கு பின்னால் வந்த பைக்கில் இருந்தவர்கள் அவரை வழிமறித்து தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த குமார் மயங்கி விழுந்துவிட்டார். இதையடுத்து அந்த நபர்கள் குமார் வைத்திருந்த டாஸ்மாக் வசூல் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடிவிட்டார்கள்.
தெருவில் மயங்கிக் கிடந்த குமாரை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு குமார் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
குமார் தினமும் இரவு கடையை பூட்டிவிட்டு விற்பனை பணத்துடன் வருவதை அறிந்த யாரோ தான் இதை செய்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications