மோடி வேட்புமனுவை முன்மொழிந்த டீக்கடைக்காரர்.. டீக்கடைக்காரர்கள் வரவேற்பு
சென்னை: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தபோது டீக்கடைக்காரர் ஒருவரை தனது மனுவை முன்மொழிய வைத்ததற்கு சென்னையில் உள்ள சில டீக்கடைக்காரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வதோதரா தொகுதியில் இன்று மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது ஒரு டீக்கடைக்காரர்தான் மோடியின் மனுவை முன்மொழிந்தார்.
மோடியை முன்பு சில காங்கிரஸ் தலைவர்கள் டீ விற்றவர்தானே என்று கிண்டலடித்தது முதல் டீயையும் ஒரு பிரசார ஆயுதமாக்கி விட்டது பாஜக. அந்த அடிப்படையில் இன்று மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்தபோது டீக்கடைக்காரரையே விட்டு மனுவை முன்மொழிய வைத்து விட்டனர்.

இதுகுறித்து சென்னயைச் சேர்ந்த சில டீக்கடைக்காரர்கள் கூறுகையில், குஜராத் கலவரத்தில் பலர் உயிர் இழப்பதற்கு மோடிதான் காரணம் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
விரல் நுனியில் அனைத்து விஷயங்களையும் கையில் வைத்திருக்கும் மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருப்பது வர வேற்கத்தக்கதுதான். மக்களும் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
டீக்கடைக்காரர் ஒருவரை தனது வேட்புமனுவை முன் மொழியச் செய்திருப்பதன் மூலம் நரேந்திர மோடி உழைப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர் என்பது உறுதியாகியுள்ளது. அவர் நாட்டுக்கு நல்லது செய்வார் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.
நரேந்திர மோடி டீக்கடைக் காரர்களை பெருமைப்படுத்தி இருப்பதன் மூலம் தான் கடந்து வந்த பாதையை மறக்காமல் இருப்பது தெளிவாகியுள்ளது. வந்த வழியை எல்லோருமே மறக்காமல் இருப்பது நல்லதுதான் என்றனர்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications