நெல்லை: மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது
நெல்லை: நெல்லை அருகே பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ளது கனார்பட்டியில் தனியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மேலப்பாளையம் அமுதா நகரை சேர்ந்த வில்சன் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் 5;வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தனர்.
அவர்களது பெற்றோர் அவர்களை கண்டித்து பள்ளிக்கு செல்லுமாறு கூறியபோது. அவர்கள் பள்ளிக்கு செல்ல மாட்டோம் என்று அழுதவாறு கூறியுள்ளனர். அதற்கான காரணம் குறித்து பெற்றோர் விசாரித்த போது, ஆசிரியர் வில்சன் தினமும் கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இந்த விபரத்தை ஊர் மக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியரை கைது செய்ய கோரி பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மற்றும் போலீசார் அங்கு வந்து முறைப்படி புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதன் பேரில் மானூர் போலீசில் பெற்றோர் புகார் மனு கொடுத்தனர். போலீசார் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஆசிரியர் வில்சனை கைது செய்தனர்.
கைதான வில்சன் விடுமுறை நாட்களில் இயேசு குறித்து சுவிஷேச பணிகள் செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் மானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications