பக்கத்து வீட்டில் 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த பெண்ணுடன் ஆசிரியர் ஓட்டம்....!
சேலம்: பக்கத்து வீட்டில் 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த பெண்ணுடன் கள்ளக்காதல் கொண்ட பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் அந்தப் பெண்ணுடன் ஓடி விட்டார்.
அந்தப் பெண்ணோ கள்ளக்காதல் மோகத்தில் தனது குழந்தைகள் இரண்டையும் அனாதைகளாக்கி விட்டு ஓடி விட்டார். அந்தக் குழந்தைகளை தற்போது போலீஸார் மீட்டு அப்பெண்ணின் மாமனார், மாமியாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சேலம், தம்மம்பட்டி குரும்பர் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். 35 வயதான இவரது மனைவி சுகன்யா. ரமேஷ் குமார் ஆசிரியர் ஆவார்.
ரமேஷ் குமார் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் அகிலாண்டேஸ்வரி. 26 வயதாகிறது. இவரது கணவர் பெயர் சண்முகம். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அகிலாண்டேஸ்வரி தனது இரு மகன்களுடன் தனியாக வசித்து வந்தார். குழந்தைகளுக்கு முறையே 4 மற்றும் 2 வயதாகிறது.
அகிலாண்டேஸ்வரியுடன் முதலில் நட்பாக பழகத் தொடங்கியுள்ளார் ரமேஷ் குமார். பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. இது சுகன்யாவுக்குத் தெரிய வந்து அவர் கணவரைக் கண்டித்துள்ளார். அவரோ கள்ளக்காதல் முற்றிப் போய் அகிலாண்டேஸ்வரியே கதி என்று சுற்றித் திரி்ந்துள்ளார்.
இந்த நிலையி்ல நேற்று அகிலாண்டேஸ்வரியும், ரமேஷ்குமாரும் தலைமறைவாகி விட்டனர். தனது குழந்தைகள் இரண்டையும் அப்படியே வீட்டில் விட்டு விட்டு ஓடிப் போயுள்ளார் அகிலாண்டேஸ்வரி.
பாவம் அந்த இரு குழந்தைகளும் தாயைக் காணாமல் வீட்டுக்குள் தவித்துக் கொண்டிருந்தன. போலீஸில் புகார் போய் தற்போது போலீஸார் இரண்டு குழந்தைகளையும் மீட்டு மலேசியாவில் இருக்கும் சண்முகத்தின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்து வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
