தூத்துக்குடியிலும் ஒருதலைக் காதல்... சர்ச்சில் ஆசிரியை வெட்டிப் படுகொலை- கொலையாளி தற்கொலை!!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஒருதலைக் காதல் வெறியில் சர்ச்சுக்குள் நுழைந்து ஆசிரியை பிரான்சினா வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரை வெட்டி கொலை செய்த இளைஞர் சீகன் தப்பி ஓடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இன்று காலை வழக்கம் போல் மாணவர்கள் வகுப்புக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பிரான்சினா என்ற ஆசிரியை பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள சர்ச்சில் வழிபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த அரிவாளால் ஆசிரியை பிரான்சினாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினார். இதில் ஆசிரியை பிரான்சினா சம்பவ இடத்திலேயே அலறியபடி துடிதுடித்து மயங்கி விழுந்தார்.
இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் பிரான்சினாவை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரான்சினா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரான்சினாவுக்கு செப்டம்பர் 8-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதனால் இன்றுடன் பணியில் இருந்து நின்றுவிடவும் அவர் முடிவு செய்திருந்தார்.
இந்த நிலையில்தான் அவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பிரான்சினாவை வெட்டியது அதே பகுதியைச் சேர்ந்த சீகன் என்பவர்தான்.... பிரான்சினாவை ஒருதலையாக காதலித்து வந்தார் சீகன்.

ஆனால் பிரான்சினாவுக்கு திருமணம் உறுதியானதால் தமக்கு கிடைக்காதவர் வேறு யாருக்கும் கிடைத்துவிடக் கூடாது என்ற காட்டுமிரண்டித்தனமான வெறியால் படுகொலை செய்திருக்கிறார் சீகன்.
பிரான்சினாவை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சீகன், மணல் தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தில் ஒருதலைக்காதல் சம்பவத்தில் நடக்கும் கொலைகள் அதிகரித்து வருகின்றன. நேற்று கரூரில் கல்லூரியில் வகுப்பறையில் மாணவி ஒருவர் கட்டையால் அடித்துக்கொல்லப்பட்ட நிலையில் இன்று சர்ச்சில் பள்ளி ஆசிரியை பிரான்சினா வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications