மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் வாய் பேச முடியாத இளம்பெண்ணை சீரழித்த தொழிற்கல்வி ஆசிரியர் கைது
கோவை: காரமடை அருகே மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் தங்கியிருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்து உள்ள காரமடை அருகே இருக்கும் குட்டையூரில் நேயம் ஊனமுற்றோர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூளை வளர்ச்சி குன்றியவர்கள் படித்து வருகின்றனர். இது தவிர இது காப்பகமாகவும் உள்ளது. இந்த காப்பகத்தில் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் வணங்காமுடி(57) என்பவர் இந்த பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியராக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 1 வாரத்திற்கு முன்பு அங்கு தங்கியிருந்த வாய் பேச முடியாத 20 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து அறிந்த நிர்வாகம் சம்பவத்தை மறைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
கோவையில் இருந்து சேவா சங்கம் மூலம் தான் இந்த பள்ளிக்கு மளிகை பொருட்கள் வழங்கப்படும்.
அவ்வாறு மளிகை பொருட்கள் கொண்டு வந்தவர்களிடம் அப்பெண் சைகையால் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்தார். உடனே அவர்கள் இது குறித்து கோவை மக்கள் நல சேவா சங்கத் தலைவர் குருமூர்த்தியிடம் தெரிவித்தனர். அவர் இந்த சம்பவம் பற்றி காரமடை போலீசில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் வணங்காமுடியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications