ஆசிரியர் தினவிழா... காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் கொண்டாட்டம்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராம.சு. இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காரைக்குடியில் உள்ள இராம.சு. ராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளி உள்ளூரில் ரொம்பப் பிரபலம். தனியார் பள்ளிகளுக்கு இணையான பாட போதனை, வசதிகள், சுத்தம் என அட்டகாசமாக கலக்கி வருகிறது.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவ மாணவியரும் படிப்பதில் சாதனை புரிகின்றனர். கடுமையான போட்டியைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த வகையில் காரைக்குடியில் உள்ள இந்த நகராட்சிப் பள்ளி வெப்சைட் எல்லாம் வைத்து அசத்தி வருகிறது.

ஆசிரியர் தினவிழா
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5, ஆசிரியர் தினமாக அனைத்துப் பள்ளிகளிலும் கடைபிடிக்கப் பட்டுவருகிறது. தூய்மையான பாரதம் பற்றி பேச்சு போட்டி நடத்திய ராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ரோஜாப்பூக்கள்
காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ரோஜா பூக்களை கொடுத்து ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நினைவுப்பரிசு
ஆண்டுதோறும் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசுகளை கொடுத்து மகிழ்ந்தனர் மாணவர்கள். மாலையில் காரைக்குடி அழகப்பாபுரம் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

ஆசிரியர்களுக்கு வாழ்த்து
ஆசிரியர் தின விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் திரு. பீட்டர் ராஜா தலைமையேற்றார். அழகப்பாபுரம் அரிமா சங்கத் தலைவர் திரு. முருகேசன் அனைவரையும் வரவேற்றார். அரிமா சங்க மண்டல தலைவர் திரு .கணேசன், திரு. நிலவழகன்,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஆசிரியர்களுக்கு பொன்னாடை
அழகப்பா கலைக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் சிதம்பரம் ஆசிரியர்களின் சிறப்புக்கள் குறித்து சிறப்புரையாற்றினார். விழாவில் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

பட்டதாரி ஆசிரியைகள்
அரிமா சங்க பொறுப்பாளர் திரு சுப்பையா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியைகள் சித்ரா, கீதா சுந்தரேஸ்வரி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications