தினகரனை நீக்குவதாக உடனே அறிவியுங்கள்... எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் ஓபிஎஸ்
அதிமுகவில் இருந்து டிடிவி தினகரனை நீக்குவதாக உடனே அறிவிக்க வேண்டும் என எடப்பாடி கோஷ்டிக்கு ஓபிஎஸ் கோஷ்டி நெருக்கடி கொடுத்து வருகிறது.
சென்னை: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நெருக்கடி கொடுத்து வருகிறாராம். ஆனால் பொதுச்செயலர் சசிகலாதானே அவரை நீக்க வேண்டும் என தயங்கி வருகிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுகவின் இரு கோஷ்டிகள் இணைப்பு பேச்சுவார்த்தை இன்று நாளை என நிச்சயமற்ற நிலையே நீடிக்கிறது. அதேநேரத்தில் ஓபிஎஸ் கோஷ்டி முன்வைக்கும் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறியும் வருகிறது.

பேனர்கள் அகற்றம்
சசிகலா, தினகரன் இல்லாத அதிமுக என்கிற நிலை தற்போது உருவாகிவிட்டது. தினகரன் டெல்லியில் கைது செய்யப்பட்ட நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டன. ஜெயலலிதாவின் பேனர்கள் மட்டுமே தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருக்கின்றன.

ஓபிஎஸ் தரப்பு நெருக்கடி
இந்த நிலையில் அமாவாசை நாளான இன்று இரு கோஷ்டிகளும் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தும் என கூறப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் தரப்போ, கைது செய்யப்பட்டுள்ள தினகரனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவிக்க வேண்டும் என எடப்பாடி தரப்புக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

நீக்க தயக்கம்
இருப்பினும் பொதுச்செயலராக உள்ள சசிகலாதானே தினகரனை நீக்க முடியும்... நாங்க எப்படி அதை செய்ய முடியும் என கையை பிசைகிறதாம் எடப்பாடி தரப்பு. அதிமுகவின் அமைப்பு செயலர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி நீங்க நீக்கலாம் என அழுத்தம் கொடுக்கிறது ஓபிஎஸ் தரப்பு.

நீக்கமா? ராஜினாமாவா?
இதைஏற்று எந்த நிமிடத்திலும் தினகரனை அதிமுகவில் இருந்து நீக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இதனிடையே தாமே அதிமுக துணைப் பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்தால் கவுரமாகவே இருக்கும் என தினகரன் கருதுகிறாராம். இன்றே தினகரன் நீக்கம் அல்லது ராஜினாமா செய்தி வெளியாகலாம் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications