ஆர்.கே.நகரில் சசி அதிமுக வேட்பாளராக எம்ஜிஆர் வளர்ப்பு மகள் சுதா விஜயகுமார்?
ஆர்.கே.நகர் தொகுதியில் எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகள் சுதா விஜயகுமாரை வேட்பாளராக நிறுத்த சசிகலா அதிமுக முடிவு செய்துள்ளதாம்.
சென்னை: ஆர்.கே.நகரில் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகளான சுதா விஜயகுமாரை வேட்பாளராக நிறுத்த சசிகலா அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம் 12-ந் தேதி நடைபெற உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நடைபெறும் தேர்தல் என்பதால் தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தீபா, மதிவாணன்
இத்தொகுதியில் பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்குகின்றன. எம்ஜிஆர் அம்மா பேரவையின் தீபா, தேமுதிகவின் மதிவாணன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாஜி டிஜிபி திலகவதி
இதனிடையே ஓபிஎஸ் அதிமுகவின் வேட்பாளராக மாஜி டிஜிபி திலகவதி வேட்பாளராக நிறுத்தப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்தேர்தலில் வென்றே ஆக வேண்டும் அல்லது 2-வது இடத்தையாவது பிடித்தாக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் சசிகலா அதிமுகவும் வேட்பாளர் தேர்வில் மும்முரமாக இருக்கிறது.

சுதா விஜயகுமார்
தற்போது எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயகுமாரை வேட்பாளராக நிறுத்தலாம் என முடிவு செய்துள்ளதாம் சசிகலா அணி. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் ஆர்.கே.நகர் தொகுதியில் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகளை இறக்குவதன் மூலம் வாக்குகளை எளிதாக பெற்றுவிட முடியும் என்பது சசிகலா அணியின் கணக்கு.

விரைவில் அறிவிப்பு?
இதற்கு சுதா விஜயகுமாரும் ஒப்புதல் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு கூட்டத்துக்கு பின்னர் நாளை மறுநாள் அதிகாரப்பூர்வமாக சுதா விஜயகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார்.

எம்ஜிஆர் விஜயன்
சுதாவின் கணவர் எம்.ஜி.ஆர். விஜயன் என்கிற விஜயகுமார் கடந்த 2008-ம் ஆண்டு சுதாவின் தங்கை பானு ஏவிய கூலிப்படையால் சொத்துக்காக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பானு உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications