தர்மபுரி: ப்ளஸ் டூ மாணவி கடத்தி பலாத்காரம் 2 பேர் கைது
தருமபுரி: வீட்டில் தனியாக இருந்த பிளஸ் 2 மாணவியை மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள புட்டிரெட்டிப்பகுதியைச் சேர்ந்தவர் மாலதி (பெயர் மாற்றம்). இவர் புட்டிரெட்டிப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் உறவினரை வழியனுப்புவதற்காக மாலதியின் பெற்றோர் சென்றுவிட்டனர். அப்போது மாலதி மட்டும் தனியாக இருப்பதை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், தன் நண்பர்கள் பிரசாந்த் மற்றும் சுரேஷ் ஆகியோருடன் சென்று மாலதியை அருகில் உள்ள சிதலமடைந்த வீட்டிற்கு கடத்தி வந்திருக்கிறார்கள். சக்திவேல், சரண்யாவை பலாத்காரம் செய்ய சுரேஷும், பிரசாந்தும் காவலுக்கு நின்றிருக்கிறார்கள்.
மாலதியின் அலறல் சத்தம் கேட்கவும் ஊர்மக்கள் திரள ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்குள் மூவரும் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர். இந்த தகவல் மாலதியின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாலதியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கடத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, சுரேஷ் மற்றும் பிரசாந்தை கைது செய்தனர். சக்திவேல் மட்டும் தலை மறைவாக உள்ளார் அவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
தமிழகத்தில் கடந்த 20 நாட்களில் நடந்த நான்காவது பலாத்கார சம்பவமாகும். கடந்த 1ஆம் தேதி தேனி சின்னமனூரில் 5ஆம் வகுப்பு மாணவி நந்தினி மூன்று பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டார்.
கடந்த 15ஆம் தேதி வேலூரில் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் ஆட்டோ டிரைவரால் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
கடந்த 16ஆம் தேதி குடியாத்தம் அருகே 6ஆம் வகுப்பு மாணவியை சக மாணவனே பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தான். இந்த அதிர்ச்சி நீங்கும் முன்பாக தர்மபுரியில் வீட்டில் இருந்த மாணவியை கடத்திச்சென்று பலாத்கரம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கும், இளம்பெண்களுக்கும் பாதுகாப்பற்ற நிலையே நிலவுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications