"ஆங்கில" புத்தாண்டு வாழ்த்தினை.. தூய தமிழில் பதிவிட்ட.. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை!
தமிழிசை சவுந்தராஜன் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்
சென்னை: ஆங்கில புத்தாண்டு வாழ்த்தினை தமிழில் பதிவிட்டுள்ளார் தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தராஜன்! இதையடுத்து, அக்கா நலமா என்று கேட்டு ட்விட்டர்வாசிகள் தங்கள் வாழ்த்துடன் கூடிய அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
நாளை புத்தாண்டு பிறக்கப்போவதால், அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழிசை சவுந்தராஜனும் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், "அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். #happynewyear2020" என்று வாழ்த்து சொல்லி உள்ளார்.
இது தொடர்பாக வாழ்த்து செய்தி ஒன்றையும் தனியாக வெளியிட்டுள்ளார். அதில், "2020-ஆம் ஆண்டு அனைத்து மக்களுக்கும் இன்பத்தையும், மகிழ்ச்சியையும், சுகத்தையும் தரும் ஆண்டாக அமைய வேண்டும்.
இயற்கை பேரிடர்கள் இல்லாத ஆண்டாக, இயற்கை வளம் மிகும் ஆண்டாக அனைவருக்கும் அமைதி தரும் ஆண்டாகவும் இந்த ஆண்டு அமைய வேண்டும். வேற்றுமை களைந்து ஒற்றுமையோடு அனைவரும் மகிழ்ச்சியோடு புத்தாண்டை கொண்டாடுவோம். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.#happynewyear2020 pic.twitter.com/fUENiukVKc
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) December 31, 2019
தமிழிசையின் இந்த வாழ்த்து செய்தியிலும் ட்விட்டர்வாசிகள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளனர்.. அத்துடன் தங்கள் ஏக்கத்தையும், வருத்தத்தையும் தெரிவித்து கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
"அக்கா நலமா? நீங்கள் இல்லாத தமிழக அரசியல் களம் வெற்றிடமாக தெரிகிறது", என்றும் "ஒரு காலத்துல அக்கா கண்டண்ட் இல்லாத சோசியல் மீடியாவும் இருக்காது, பொழுதும் விடியாது. இப்போ விழாவுக்கு வாழ்த்து சொல்ற நிலைமைக்கு கொண்டு வந்து விட்டிங்களேடா" என்றும் பதிவுகள் விழுந்தபடியே உள்ளன!
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications