ஜவ்வாய் இழுக்கும் கொடநாடு கொலை வழக்கு...துப்பு தேடும் அதிகாரிகள்!

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் துப்பு தேடி தொலைதொடர்பு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

கோத்தகிரி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை குறித்து தொலைபேசி மூலம் தகவல் பரிமாற்றப்பட்டதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி நள்ளிரவில் காவலாளி ஓம்பகதூர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதனால் கொடநாடு பங்களாவல் கொள்ளை முயற்சியின் போது கொலை நடைபெற்றிருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்த கொலை மற்றும் கொள்ளையின் போது படுகாயமடைந்த மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர் சிகிச்சைக்குப் பின்னர் போலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கில்முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெ.வின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் ஏப்ரல் 28ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு குற்றவாளி என சொல்லப்பட்ட சயன் ஏப்ரல் 29ம் தேதி பாலக்காடு அருகே சிலை விபத்தில் சிக்கினார், ஆனால் இந்த விபத்தில் சயனின் மனைவி மற்றும் குந்தை மட்டுமே உயிரிழந்தனர், சயன் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 பணம் திருடப்படவில்லை

பணம் திருடப்படவில்லை

கொடநாடு பங்களாவில் பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5 கைக்கடிகாரங்கள், அலங்காரப் பொருள் மட்டுமே திருடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கொலை மற்றும் கொள்ளையில் சந்தேகிக்கப்படும் 11 பேரில் 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 அவிழ்க்கப்படாத முடிச்சுகள்

அவிழ்க்கப்படாத முடிச்சுகள்

எனினும் கொலை மற்றும் கொள்ளைக்கான உண்மையான காணரம் என்ன என்ற மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாம்ல் சிக்கல் நீடித்துக் கொண்டே தான் இருக்கின்றன. இந்நிலையில் காவலாளி கொலை வழக்கில் துப்பு கிடைக்குமா என்று கொடநாட்டில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

 சயானை கைது செய்யாதது ஏன்?

சயானை கைது செய்யாதது ஏன்?

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கனகராஜின் நண்பர் எனச் சொல்லப்படும் சயான் மருத்துவமனையில் உள்ளார் அவரிடம் விபத்து குறித்து கேரள போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் இன்று வரை சயானை தமிழக போலீசார் கைது செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 அதிகாரிகள் ஆய்வு

அதிகாரிகள் ஆய்வு

ஏப்ரல் 24ம் தேதியும் அதற்கு முன்னரும் கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் செல்போன் மலம் தகவல் பரிமாற்றம் ஏதேனும் செய்தள்ளனரா என்று தொலைதொடர்பு அதிகாரிகள் ஆய்வு நடத்துவதாக கூறப்படுகிறது. எப்போதுதான் கொடநாடு மர்ம முடிச்சு அவிழுமோ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+