சீரியல் இயக்குநர் பாலஜி யாதவ் தற்கொலைக்கு காரணம்: வேலையில்லை... கடன் தொல்லை...
பிரபல டிவி சீரியல் இயக்குநர் பாலாஜி யாதவ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதற்குக் காரணம் கடன் தொல்லை என்று தெரியவந்துள்ளது.
பிறமொழியில் இருந்து டப்பிங் செய்யப்படும் தொடர்கள் தமிழ் சேனல்களில் அதிகரித்து வருவதால் வேலையில்லாமல் சிரமப்பட்ட பாலாஜி யாதவ் தன் உயிரை மாய்த்துக்கொண்டார் என்று அவரது மனைவி கூறியுள்ளார்.

உயிரிழந்த பாலஜி யாதவ் (45) சென்னை சாலிகிராமம் காவேரி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். பிரபல சின்னத்திரை தொடர்கள் இயக்குனரான இவர் தனியார் தொலைக்காட்சிகளில் ‘லட்சுமி', ‘துளசி', ‘பயணம்', ‘பந்தம்', ‘உறவுகள்', ‘அரசி', ‘காயத்ரி', ‘புகுந்த வீடு', ‘செல்வி', ‘ரோஜா' உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நெடுந்தொடர்களை இயக்கியுள்ளார்.
இவர் நேற்று காலையில் தனது வீட்டில் பூட்டிய அறையில் பாலாஜி யாதவ் தூக்கில் பிணமாக தொங்கினார். அவருடைய உடலை பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணவேணி கதறினார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து பாலாஜி யாதவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கடன் தொல்லை காரணமாகவே பாலாஜி யாதவ் தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக அவருடைய மனைவி கிருஷ்ணவேணி கண்ணீர் மல்க தெரிவித்தார்.
எங்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இதனையடுத்து ஹர்சிதாவை 2 மாத கைக்குழந்தையாக வடபழனி கோவிலில் தத்தெடுத்தோம். ஹர்சிதா மீது அவர் மிகுந்த பாசம் வைத்திருந்தார். சமீபத்தில் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றை வாங்கினோம்.
டப்பிங் தொடர்கள்
பிறமொழிகளில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட நெடுந்தொடர்கள் தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் அதிகளவில் ஒளிபரப்பாகிறது. இதனால் அவருக்கு நேரடி தமிழ் தொடர்கள் இயக்குவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது. கடந்த 6 மாத காலமாக வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார்.
கடன் தொல்லை
இதனால் வீட்டிற்கான கடன் தவணை தொகையை செலுத்த முடியாமல் தவித்தோம். சில தினங்களுக்கு முன்பு கூட வங்கியில் இருந்து வீட்டிற்கான கடன் தொகையை செலுத்துங்கள் இல்லை என்றால் ஜப்தி செய்துவிடுவோம் என்று அவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவலை என்னிடம் காண்பித்து மிகவும் வேதனைப்பட்டார்.
குழந்தை பாசம்
வியாழக்கிழமை இரவு ஹர்சிதாவை யாரிடம் இருந்து தத்தெடுத்தோமோ, அவர்களிடம் நீங்கள் வளர்த்துக்கொளுங்கள் என்று என் கணவர் கொடுத்துவிட்டார். ஆனால் எங்கள் பாசத்தை அறிந்த அவர்கள், காலையில் வந்து குழந்தையை வாங்கிக் கொள்ளுங்கள் என்று என்னிடம் கூறினார்கள்.
தற்கொலை முடிவு
குழந்தை மீது அதிக பாசம் வைத்திருந்ததால் எப்போது விடியும் என்று காத்திருந்தேன். காலையில் பங்குனி உத்திரம் என்பதால் குழந்தையுடன் முருகன் கோவிலுக்கு செல்லவேண்டும் என்று நினைத்தேன். அதற்குள் இந்த சோக முடிவை எடுத்துவிட்டார் என்று கூறினார்.
சின்னத்திரை நடிகர்கள் அஞ்சலி
பிரேத பரிசோதனை முடிந்து பாலாஜி யாதவ் உடல் இறுதிச்சடங்குகளுக்காக சொந்த ஊரான திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. பாலாஜி யாதவ் உடலுக்கு சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் உள்பட நடிகர்-நடிகைகள் மற்றும், இயக்குனர்கள் அஞ்சலி செலுத்தினர்.
டப்பிங் தொடர்களால் பாதிப்பு
சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் கவிதா பாரதி கூறும்போது, "பாலாஜி யாதவின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. சமீப காலமாகவே பிறமொழி தொடர்கள் காரணமாக வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. ஆகவே தொலைக்காட்சிகள் மொழிமாற்றம் செய்யும் தொடர்களை ஒளிபரப்பக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications