சென்னையில் பயங்கரம்.. பூசாரியை கழுத்து அறுத்து கொன்ற போதை வாலிபர்
சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையில் கோயில் பூசாரியின் தலையில் அம்மிக்கல்லை போட்டும், கழுத்தை அறுத்தும் கொலை செய்யபட்டுள்ளார். இது தொடர்பாக போதை வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பழைய வண்ணாரப் பேட்டை டி.எச்.சாலையைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (32). இவர் தங்கசாலையில் உள்ள ஆதிபராசக்தி எல்லையம்மன் கோயிலில் பூசாரியாகவும் இருந்து வந்தார்.

இவரது உறவினர் ஏழுமலை (25) குடிப்பதற்காக கார்த்திக் ராஜாவிடம் அடிக்கடி பணம் வாங்குவாராம். கார்த்திக் ராஜா பணம் கொடுக்கும்போதெல்லாம் ஏழுமலையை திட்டி அனுப்புவாராம்.
இந்நிலையில் நேற்று இரவு கார்த்திக் ராஜாவை சந்தித்த ஏழுமலை அவரது நண்பருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இதனால், பணம் அதிகமாக தேவைப்படுவதால் பெரிய தொகை பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு கார்த்திக் ராஜா, "உனக்கே இன்னும் திருமணம் ஆகவில்லை. நீ இன்னொருவருக்கு திருமணம் செய்து வைக்க போகிறாயா? என தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனால் கார்த்திக் ராஜா மற்றும் ஏழுமலைக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. பின்னர், இருவரும் அங்கிருந்து சென்றுள்ளனர். இதையடுத்து கார்த்திக் ராஜா கோயில் பூஜையை முடித்த பிறகு வீட்டுக்கு செல்லாமல் அங்கேயே இரவு தூங்கியுள்ளார்.
இதையடுத்து, இன்று அதிகாலை கோயிலுக்கு வந்த ஏழுமலை கோயிலில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து தூங்கிக்கொண்டிருந்த கார்த்திக் ராஜா தலையில் போட்டுள்ளார். வலியால் கத்தி கதறிய கார்த்திக் ராஜாவை ஏழுமலை கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.
யாரோ கத்திய சத்தம் கேட்டு வந்து பார்த்த பொதுமக்கள் கார்த்திக் ராஜா ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் வண்ணாரப்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீஸார், கார்த்திக் ராஜாவை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கே பரிசோதனை செய்த மருத்துவர்கள் கார்த்திக் ராஜா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையிலேயே கார்த்திக் ராஜாவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக தலைமை மறைவாக இருந்த ஏழுமலையை தேடிவந்த போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கோயில் பூசாரியை போதை வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications