தென்காசி நில ஆக்கிரமிப்பு.. 30 பேரை ஊரை விட்டே ஒதுக்கி வைத்த கிராம தலைவர்.. கலெக்டருக்கு இப்ப தலைவலி

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசியில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சனையில், ஊரைவிட்டு ஒரு குடும்பத்தை கிராம தலைவர் ஒதுக்கி வைத்த நிலையில், அவர்களுடன் பழகியதாக 30 பேரும் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பட்டுள்ளனர்.. இதையடுத்து, இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் கையில் எடுத்துள்ளது.. மேலும், 30 பேரையும் கிராம தலைவர் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பாக விளக்கம் கேட்டு, தென்காசி மாவட்ட தலைவருக்கு நோட்டீஸும் அனுப்பியிருக்கிறது.

கிராம பஞ்சாயத்தில், எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர், ஊரை விட்டு தள்ளி வைத்த விவகாரத்தில் தென்காசி மாவட்ட கலெக்டருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Tenkasi Collector nhrc

தென்காசி நில ஆக்கிரமிப்பு பிரச்சனை

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பகுதியில், நில ஆக்கிரமிப்பு பிரச்சனை தொடர்பாக, ஒரு குடும்பத்தினர், ஒரு நபர் மீது வழக்கு தொடர்ந்தார்கள்.. இந்த குடும்பத்தினருக்கு ஆதரவாக மேலும் 7 குடும்பத்தினர் சேர்ந்தனர்.. இந்த 8 எட்டு குடும்பங்களை சேர்ந்த 30 பேரையும், ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக கிராமத் தலைவர் அதிரடியாக உத்தரவிட்டார்..

அதாவது, நில ஆக்கிரமிப்பு பிரச்சனையில், ஒரு குடும்பத்தை ஊரைவிட்டு கிராம தலைவர் ஒதுக்கி வைத்திருக்கிறார்.. ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்துடன் 7 குடும்பத்தை சேர்ந்த 30 பேர் பழகினார்களாம். அதனால் 30 பேரையுமே கிராம தலைவர் ஒதுக்கி வைத்துவிட்டார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த 30 பேரும், இந்த உத்தரவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.. ஆனால், 30 பேரையும் போலீசார் கைது செய்துள்ளது..

தேசிய மனித உரிமைகள் ஆணையம்

இந்த தகவல் வெளியாகி தென்காசியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டுபண்ணிய நிலையில், இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.. அத்துடன் இது 30 பேரையும் ஊரைவிட்டு ஒதுக்க வைத்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

அந்த நோட்டீசில், "வடகரை பகுதியில், 30 பேரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததோடு, உள்ளூர் கடைகளில் பொருட்கள் வாங்குவது, அடிப்படை வசதிகள், கிராமத்தில் மற்றவர்களுடன் பழகுவது போன்றவைகளும் தடுக்கப்பட்டிருந்தன. இது, மிகக் கடுமையான மனித உரிமை மீறல். மேலும், ஊரை விட்டு ஒதுக்கப்பட்டதை கண்டித்து, கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய 30 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும் 2 வாரம் டைம்

பிப்ரவரி 20ல், கிராமத் தலைவர் உத்தரவை பிறப்பித்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த உத்தரவை வாபஸ் வாங்குமாறு, அவருடன் வருவாய் கோட்டாட்சியர் பேச்சு நடத்தி இருக்கிறார். ஆனாலும், எந்த பயனும் ஏற்படவில்லை. இந்த ஒட்டுமொத்த விவகாரம் குறித்து, இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை அளிக்குமாறு தென்காசி மாவட்ட கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+