கேரளாவில் குண்டு காயங்களுடன் தப்பிய மாவோயிஸ்டுகள் - எல்லைகளில் போலீஸ் சோதனை
செங்கோட்டை: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், கேரள அதிரடிப்படை போலீஸாருக்கும் இடையே சனிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், மாவோயிஸ்ட்கள் இருவர் காயமடைந்து தப்பியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தமிழக, கேரள, கர்நாடக, ஆந்திர மாநில எல்லைகளில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

கோவையில் இருந்து கேரள மாநிலம் மன்னார்காடு செல்லும் சாலையில் சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ளது அமைதி பள்ளத்தாக்கு. இதன் நடுப்பகுதியாக விளங்குவது பழங்குடியினர் கிராமமான கடுகு மண்ணு. இங்கு மாவோயிஸ்ட்கள் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கேரள அதிரடிப் படையினர் ஒரு பிரிவாகவும், அகளி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு பிரிவு போலீஸாரும் நேற்று காலை முக்காலி வழியாகவும், அகளி வழியாகவும் சென்று முகாமிட்டனர்.

கடுகு மண்ணுவில் ஒரு பெண் உட்பட 5 மாவோயிஸ்ட்கள் தங்கியி ருந்ததைக் கண்டுபிடித்தனர். இதையறிந்த மாவோயிஸ்ட் கள், போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப் படுகிறது. பதிலடியாக கேரள அதிரடிப்படை போலீஸார் 7 ரவுண்டு சுட்டதாகவும், அதில் 2 மாவோயிஸ்ட்கள் குண்டு காயமடைந்து தப்பியோடியதாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
முதலில் மாவோயிஸ்ட்கள் தான் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதிரடிப்படை போலீஸார் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார்.
இந்நிலையில், தேடுதல் வேட்டைக்கு கூடுதல் போலீஸார் அனுப்பப்பட்டுள்ளதாக பாலக்காடு மாவட்ட ஆட்சியர் மேரிகுட்டி தெரிவித்தார். இந்த மோதலில் போலீஸார் யாரும் காயமடையவில்லை என்பதை அவர் உறுதி செய்தார்.
இந்நிலையில், காயமடைந்ததாக கூறப்படும் 2 மாவோயிஸ்ட்களை சிகிச்சைக்காக கொண்டு வரக்கூடும் என்பதால் தமிழக எல்லையான மாங்கரை, முள்ளி, ஆனைகட்டி போன்ற இடங்களில் உள்ள சோதனைச் சாவடி களில் கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. கர்நாடக, ஆந்திர எல்லைகளிலும் அந்தந்த மாநில போலீஸார் உஷார்படுத்தப்பட் டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் தமிழக கேரள எல்லைபகுதியான புளியரை சோதனைச் சாவடியில் தென்காசி காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications