அரசு மருத்துவமனையில் யார் பாருங்க.. கணவனின் டிரவுசர் பாக்கெட்டில் அதென்ன பொட்டலம்? தெறித்த தென்காசி
தென்காசி: தென்காசியில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் நேற்றிலிருந்து வலம் வந்து கொண்டிருக்கிறது.. இதனால் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையே பரபரத்து போய்விட்டது.. என்ன நடந்தது? தென்காசியில்? யாரிந்த துணிச்சல் கணவர்?
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது ஜமீன் இழந்தைகுளம் என்ற கிராமம். இங்கு வசித்து வரும் தம்பதி வேல்ராஜ் மகேஸ்வரி.. நேற்றைய தினம் காலையில் மகேஸ்வரி, விவசாய தோட்டத்தில் புல் அறுத்து கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த பாம்பு மகேஸ்வரியை கடித்துள்ளது.

இதனால் வலியில் மகேஸ்வரி அலறி துடித்துள்ளார்.. அந்த சத்தம் கேட்டு ஓடிச்சென்ற அவரது கணவர் வேல்ராஜ், மனைவியை உடனடியாக காப்பாற்றாமல், ஊர்ந்து சென்று கொண்டிருந்த அந்த பாம்பை நோக்கி ஓடினார்.. அந்த பாம்பை ஆவேசத்தில் கொன்றுவிட்டு, அதற்கு பிறகு மனைவியை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்..
ஆபத்தான நிலைமை: ஆபத்தான நிலையில் மகேஸ்வரிக்கு, டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை தந்தனர்.. பிறகு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அப்போது வேல்ராஜ் தன்னுடைய டிரவுசர் பாக்கெட்டிலிருந்து பொட்டலம் ஒன்றை வெளியே எடுத்தார்.. அந்த பொட்டலத்தை பிரித்தபோதுதான், அதற்குள் பாம்பு இருந்தது தெரிய வந்தது.
மனைவியை கடித்த கண்ணாடி விரியன் பாம்பை அடித்து கொன்று, அதனை பொட்டலத்தில் மடித்து டிரவுசர் பையில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.. வேல்ராஜ் பொட்டலத்தை பிரித்ததுமே அங்கிருந்தவர்கள் பதறிவிட்டார்கள்.. இந்த சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
வீட்டு வாசல்: இப்படித்தான் சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மேலதுருவாசபுரத்தில், பாண்டி என்பவர் வீட்டிலும் ஒரு சம்பவம் நடந்தது.. இவரது மனைவி அழகு, வீட்டு வாசலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகை எடுக்க சென்றபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த பனைமரத்தின் உள்ளிருந்து வந்த மலைப்பாம்பு, அழகுவின் காலில் கடித்து விட்டது. இதனால் மனைவி அழகு, கத்தி அலறவும், கணவர் பாண்டி ஓடிவந்து மனைவி அழகுவை மீட்டார்.
அதுமட்டுமல்ல, வலியால் துடித்து கொண்டிருந்த அழகுவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், ஓடிச்சென்று பனைமரத்தை உடைத்து அதிலிருந்த மலைப்பாம்பை பிடித்துக்கொண்டு பைக்கில் வைத்துக் கொண்டு, மனைவியையும் அழைத்துக்கொண்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு சென்றார்..
மனைவியை கடித்த பாம்பு இதுதான் என்று டாக்டரிடம் காண்பித்ததுமே, வனத்துறையினருக்கு தகவல் தந்தார் பாண்டி.. மலைப்பாம்பை திருமயம் வனச்சரக அலுவலகத்தில் வனத்துறையினரிடமும் ஒப்படைத்தார்.
ஆச்சரியம்: மனைவியை காப்பாற்றியதுடன், மலைப்பாம்பையும் உரிய இடத்தில் சேர்த்துவிட்டு சென்றிருந்தார் பாண்டி. பாம்பு கடித்த மனைவியையும், மலைப்பாம்பையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்த கணவர் பாண்டியின் செயலைக் கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்த சம்பவம் நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications