Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

100 கி.மீ. வேகத்தில் செங்கோட்டையில் பறந்த ரெயில்.. தென்காசி டூ பகவதிபுரம் ரயில் சோதனை ஓட்டம்! ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று விரைவில் வரப்போகிறது.. தென்காசி- பகவதிபுரம் இடையே 100 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த தகவல்தான் தற்போது வெளியாகியிருக்கிறது.

திருநெல்வேலியிலிருந்து தென்காசி வழியாக கொல்லத்துக்கு நேரடி பகல் நேர ரயில்களை இயக்க வேண்டும் என்று மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பாண்யடிராஜா, தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் அலுவலகத்தில் கடந்த 4 நாட்களுக்கு மனு அளித்திருந்தார்.

tenkasi sengottai train

கோரிக்கைகள்: அந்த மனுவில், "மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கியதை போல, தென்காசி வழியாக நெல்லை - கொல்லம் பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும், செங்கோட்டையிலிருந்து பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம் வழியாக தாம்பரம் வரை செல்லும் தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை ரயிலை தினசரி இயக்க வேண்டும்.

ஞாயிறுகளில் நெல்லையிலிருந்து பாவூர் சத்திரம், தென்காசி, மரை வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும், திருச்செந்தூர் - திருநெல்வெலி - தென்காசி - கொல்லம் வழித்தடத்தில் ரயில்நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க வேண்டும், தென்காசி ரயில் நிலையத்தில் நீரேற்றும் வசதி ஏற்படுத்த தென்காசி ரயில் நிலையத்தை ரயில் முனையமாக மாற்ற வேண்டும், தென்காசி ரயில் நிலையித்தில் புறவழி ரயில் பாதை அமைக்க வேண்டும்.

செங்கோட்டை: தென்காசி - செங்கோட்டை இடையே இரட்டை அகல ரெயில் பாதை அமைக்க வேண்டும், தென்காசி - பகவதிபுரம் இடையே ரயில்களின் வேகத்தை 110 ஆக அதிகரிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், தென்காசியிலிருந்து செங்கோட்டை பகவதிபுரம் வரை சமதள பாதையில் உள்ள ரெயில்வே வழித்தடத்தில் நேற்று 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

100 கி.மீட்டர்: தமிழகத்தில் இருந்து கேரளாவை இணைக்கும் ரெயில்வே வழித்தடமான தென்காசி- கொல்லம் இடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது.

இந்த குறிப்பிட்ட தொலைவில் உள்ள பாதையில் ரெயில்கள் குறைந்த வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது தென்காசியில் இருந்து செங்கோட்டை பகவதிபுரம் வரை சமதள பாதையில் உள்ள ரெயில்வே வழித்தடத்தில் நேற்று 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டிருக்கிறது

இதைத்தொடர்ந்து பகவதிபுரம் முதல் புனலூர் வரை உள்ள மலை வழித்தடத்தில் குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்ட நிலையில், புனலூரில் இருந்து கொல்லம் வரையிலான வழித்தடத்தில் மீண்டும் 100 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலானது இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது.

அட்வைஸ்: இந்த சோதனை ஓட்டத்தின்போது, உடன்சென்ற ரெயில்வே உயர் அதிகாரிகள், அதிவேகத்தில் ரெயில்கள் செல்லும்போது ஏதேனும் அதிர்வு உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்கிறதா? என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்தனர்.. இந்த சோதனை ஓட்டத்தின்போது அதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுரைகளையும் வழங்கினார்கள்.

முன்னதாக, தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. இதில் பயணிகள் சங்கத்தின் தலைவர் பாண்டியராஜா தலைமை வகித்தார், செயலாளர் ஜெகன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், தென்காசி மாவட்டம் சார்ந்த பல்வேறு ரயில்வே கோரிக்கைகள் மற்றும் குறைகள் விவாதிக்கப்பட்டு, பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+