போலீஸ் அடித்ததில் தென்காசி டிரைவர் உயிரிழந்த வழக்கு.. வீடியோவை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போலீஸ் விசாரணையின் போது வேன் டிரைவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் காண்பித்த வீடியோ பதிவுகளை பார்த்த நீதிபதி அதிர்ச்சி அடையும் வகையில் இருப்பதாக கூறியுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வடக்குபுதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் முருகன் ( வயது 37). டிரைவரான இவர் கடந்த மார்ச் 8 ஆம் தேதியன்று, அச்சம்பட்டி கிராமத்தில் உள்ள பொதுமக்களை சங்கரன்கோவிலுக்கு சாமி தரிசனத்துக்காக வேனில் அழைத்துச் சென்றுள்ளார்.

சங்கரன்கோவில் நகரப் பகுதியில் வேன் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற வாகனத்தில் மோதி முருகன் ஓட்டி வந்த வேன் லேசான விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, போலீசார் ஓட்டுநர் முருகனை தாக்கியதாகவும் அதில், முருகன் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். தாக்குதல் நடத்திய போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, வேன் டிரைவர் இறந்ததற்கு இழப்பீடு கோரி முருகனின் மனைவி மீனா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், "என் கணவர் முருகன் கடந்த 8 -ம் தேதி சிவராத்திரியையொட்டி கோயிலுக்கு செல்ல அச்சம்பட்டியை சேர்ந்த சில பெண்களை வேனில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தார். அப்போது, ராஜபாளையம் ரோட்டில் முன்னால் சென்ற ஆட்டோ மீது வேன் லேசாக மோதியது. இது தொடர்பாக விசாரித்த சங்கரன்கோவில் டவுன் போலீசார், வண்டியை விட்டு கீழே இறங்கமாட்டாயா எனக்கூறி எனது கணவரை ஷூ அணிந்த கால்களால் மிதித்தனர்.
இதில் மயக்கம் அடைந்த எனது கணவர் கீழே விழுந்தார். உடனடியாக போலீசாரே வேனை ஓட்டி சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். எனது கணவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததுவிட்டதாக கூறினர். போலீஸ் காவலில் மரணமடைந்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. எனது கணவர் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்.
எங்களுக்கு இழப்பீடு, அரசுப் பணி உள்ளிட்டவை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் விசாரணை செய்தார். அப்போது அரசு தரப்பில், சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் காவலில் மரணம் நிகழவில்லை. பொது இடத்தில் சம்பவம் நடந்துள்ளது.
முருகனின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் உள்ளது. பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையை மனுதாரருக்கு வழங்கியுள்ளோம். அறிக்கை குறித்து ஆட்சேபனை எழுப்பவில்லை. சிபிசிஐடி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்" என்று கூறினர். அப்போது போலீஸ் தரப்பில் காண்பிக்கப்பட்ட வீடியோ பாதிவுகளை பார்த்த நீதிபதி, கடும் அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்துள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications