100 பேருடன் வேல் கம்புடன் வா- நான் தனியா வரேன்- ஆம்பளைன்னா வாடா நீ -கோவில்பட்டியில் கொந்தளித்த வைகோ
சென்னை: தேர்தல் பிரசாரத்தில் அடக்கி வாசித்துக் கொண்டிருந்த மதிமுக பொதுச்செயலர் வைகோ நேற்று கொந்தளிப்பின் உச்சத்துக்கு போய்விட்ட சம்பவம் அவர் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் நிகழ்ந்துள்ளது.
சட்டசபை தேர்தலில் தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் மதிமுக பொதுச்செயலர் வைகோ. கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் வைகோ போட்டியிடுகிறார்.
அத்தொகுதியில் பிரசாரம் செய்த வைகோ, அங்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றார். இதற்காக வைகோ வேனை விட்டு கீழே இறங்கியபோது ஒரு கும்பல், தேவர் சிலைக்கு அவர் மாலை போட எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியது.
இதனால் கடுப்பாகிப் போன வைகோ பிரசார வேனில் சென்று அமர்ந்து கொண்டார். பின்னர் திடீரென மைக்கை எடுத்து உணர்ச்சி பிழம்பாக வெடித்த நிலையில் பேசியதாவது:
ஜாதியை சொல்லி இந்த தொகுதியில் வேலை செய்ய முடியாது. அங்கே கத்தி கொண்டிருப்பவருக்கு சொல்றேன்.... நீ ஜாதியை சொல்லி பண்ண முடியாது...
இதுவே தேர்தல் இல்லைன்னா உள்ள வந்து மாலை போடுவேன்.... என்னை எவனும் தடுக்க முடியாது...
நான் உள்ளே வந்தா எவனும் தடுக்க முடியாது....
100 பேர் வந்தாலும் தடுக்க முடியாது... கலகம் வரும்கிறதால நான் பேசாம போறேன்...கலகம் வரும்கிறதால போறேன்...
நீ 100 பேர் அரிவாள் எடுத்துட்டு வந்தாலும் நான் உள்ளே வருவேன்... தடுத்துருவியா? தடுத்து பார் பார்ப்போம்...
என்னை நீ தடுத்து பாரு....என்னால பிரச்சனை வரக்கூடாதுன்னு இருக்கேன்...
நீ 100 பேர் வேல் கம்பு எடுத்துட்டு வா.... நான் தனியே வரேன்..
நீ ஆம்பளைன்னா தடுத்து பாரு... ஆம்பளைன்னா வாடா நீ..
இவ்வாறு வைகோ பேசினார்
தடியடி
இதனைத் தொடர்ந்து வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி 7 பேரை போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் தேவர் சிலைக்கு வைகோ மாலை அணிவித்துவிட்டு பிரசாரம் செய்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications