விடுதலை சிறுத்தை - பா.ஜக. மோதல்: முத்துப்பேட்டையில் போலீஸ் குவிப்பு
திருவாரூர்: முன்விரோதம் காரணமாக பாஜக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக முத்துப்பேட்டையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஓவரூர் கிராமத்தை சேர்ந்தவர் மைக்கல்ராஜ்(30) பா.ஜ.க பிரமுகரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகரான வினோத்(25) என்பருக்கும் நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் மைக்கல்ராஜ் நேற்று முன்தினம் மாலை ரேசன் கடைக்கு சென்றுவிட்டு தனது வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வினோத் தனது வீட்டிலிருந்து தனது பைக்கை சாலைக்கு கொண்டு வரும்பொழுது மைக்கல்ராஜிம், வினோத்தும் எதிர் பாராவிதமாக மோதிக்கொண்டனர்.
அப்பொழுது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வினோத் ஆத்திரம் அடைந்து மைக்கல்ராஜை கத்தியால் குத்தியுள்ளார். இதில் மைக்கல்ராஜ்க்கு கையில் காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததம் பா.ஜ.கவினரும், விடுதலை சிறுத்தை கட்சியினரும் கூடி ஒருத்தருக்கு ஒருத்தர் மோதிக்கொண்டனர். இதனால் பயங்கர மோதல் ஏற்பட்டது.
இதில் விடுதலை கட்சியை சேர்ந்த வினோத், லட்சுமனன், சிவலிங்கம், மன்மதராஜ், குமார், செல்வம், மேகலா, ராஜா, பிரவின், காளிதாஸ், ராஜேந்திரன் உட்பட 11 பேர் காயமடைந்தனர். அதேபோல பா.ஜ.கவை சேர்ந்த மைக்கேல்ராஜ், செல்லதுரை, கவுதமன், குமார், வடிவழகன், வேலாயுதம், முரளி, சிவா, தேவேந்திரன் உட்பட 9பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த 20 பேரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை மற்றும் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து எடையூர் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு உள்ளார். ஓவரூர் கிராமத்தில் இதனால் பதட்டம் ஏற்பட்டதால் முத்துப்பேட்டை டி.எஸ்.பி. கணபதி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications