சென்னையில் பதுங்கியிருந்த இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி கைது
சென்னை: கொல்கத்தா குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் வங்கதேச தீவிரவாதியை சென்னை மாதவரத்தில் பதுங்கி இருந்தபோது மத்திய தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்
கொல்கத்தாவில் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான வங்காள தேசத்தில் உள்ள இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த சேர்ந்த எபின் அப்துல்லா என்பவரை தேசிய புலனாய்வு போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி, சென்னை மாதவரத்தில் பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்படி, தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் மாதவரம் அம்பேத்கர்நகரில் வசிக்கும் எபின் அப்துல்லா(25) வீட்டை சுற்றி வளைத்தனர்.
பின்னர், அவனுடைய வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து அப்துல்லாவை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். பின்னர், விசாரணைக்காக அவனை அழைத்து சென்றனர். கொல்கத்தாவில் நடந்த குண்டுவெடிப்பில் அப்துல்லாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அவரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தியிருப்பதால் மேலும் சில வழக்குகளில் அப்துல்லாவிற்கு தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. அவனை மேற்கு வங்கம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் தேசிய புலனாய்வு முகமை முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications