சென்னை-கோவை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸில் சோலார் பேனல் சோதனை
சென்னை: பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயன்ஸ் ஆராய்ச்சியாளர்கள் ரயிலின் மேல்புறத்தில் சோலார் பேனல் பொருத்தும் திட்டத்திற்காக சென்னையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸை தேர்வு செய்துள்ளனர்.
பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயன்ஸ் ஆராய்ச்சியாளர்கள் ரயிலின் மேல்புறத்தில் சோலார் பேனலை பொருத்துவது குறித்து ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் டாக்டர் ஷீலா ராமசேஷா மற்றும் பேராசிரியர் ஜே. சீனிவாசன் தலைமையிலான ஆய்வு மாணவர்கள் புதன்கிழமை காலை சென்னை வந்து சதாப்தி ரயிலில் ஏறி அதில் சோலார் பேனல் பொருத்துவது குறித்து ஆய்வு செய்தனர்.

முன்னோட்டமாக சதாப்தி எக்ஸ்பிரஸில் 180 வாட் சக்தி கொண்ட இரண்டு சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட ஒரு சிறப்பு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டாக்டர் ஷீலா கூறுகையில்,
ரயில்களில் சோலார் பேனல் பயன்படுத்துவதால் ஆண்டுக்கு 90 ஆயிரம் லிட்டர் டீசலை சேமிக்கலாம் என்று ஆய்வில் கண்டறிந்துள்ளோம். ஓடும் ரயிலில் சோலார் பேனல் மூலம் எவ்வளவு மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம் என்றார்.
சதாப்தி எக்ஸ்பிரஸ் அதிவேத்தில் செல்வதுடன் சில இடங்களில் மட்டுமே நிற்கும் என்பதால் அதில் சோலார் பேனலை பொருத்தியுள்ளனர். அதில் தயாராகும் மின்சாரத்தின் அளவை குறிக்க ரயிலில் ஆய்வாளர்கள் ஷ்ராவந்த் வசிஸ்ட் மற்றும் வசிஷ்தா அதிமனே ஆகியோர் பயணம் செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications