என்னது அதிமுகவிடம் 2 சீட் கேட்டோமா?: தா.பா. மறுப்பு (அப்ப சீட்டே கேட்கலையா?!)
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுகவிடம் 2 தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டதாக வெளியான செய்திகளை அக்கட்சியின் தமிழ் மாநில செயலர் தா. பாண்டியன் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக தா. பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர ரெட்டி, மூத்த தலைவர் ஏ.பி.பரதன் ஆகியோர் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) பிற்பகல் சந்தித்துப் பேசினர். அப்போது கட்சியின் மாநிலச் செயலாளரான நானும் (தா.பாண்டியன்) உடன் இருந்தேன்.

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக - காங்கிரசுக்கு எதிராக மாற்று அணியை உருவாக்க அதிமுகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் முடிவு செய்துள்ளன என்றும், தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள், தேர்தல் பணிகள் பற்றி பின்னர் பேச இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சில நாளிதழ்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இரண்டு தொகுதிகளைக் கேட்டதாக கட்சியைச் சேர்ந்தவர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. இத்தகைய தகவல்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த யாரும் தெரிவிக்கவில்லை.
குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்குடன் வெளியிடப்படும் செய்திகளைப் புறக்கணிக்குமாறும், கட்சிப் பத்திரிகையான ஜனசக்தியில் வெளியிடப்படும் செய்தியை மட்டுமே ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தா. பாண்டியன் தமது அறிக்கையில் கேட்டுள்ளார்.
அப்ப சீட்டே கேட்கலையோ? வெறும் பிரசாரம் மட்டும்தானா!!
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications