சு.சுவாமியுடன் திடீர் சந்திப்பு- அரசியலே பேசவில்லையாம்- அடித்து சொல்லும் தா. பாண்டியன்!
பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமியை தா. பாண்டியன் கோவையில் திடீரென சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது அரசியல் பேசவில்லை என தா. பாண்டியன் கூறியுள்ளார்.
கோவை: பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமியை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா. பாண்டியன் திடீரென சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் திராவிடர் இயக்க கொள்கை பிரகடன நூற்றாண்டு நிறைவு விழாவில் தா.பாண்டியன் கலந்து கொண்டார். பின்னர் திடீரென கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஆர்ய வைத்தியசாலைக்கு தா. பாண்டியன் சென்றார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் சுவாமியிடம் உடல் நலம் குறித்து தா. பாண்டியன் விசாரித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய தா. பாண்டியன், 25 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது எனக்கும் காயம் ஏற்பட்டது. இதற்காக கோவை ஆர்ய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறேன்.
நான் இங்கு வந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமியும் சிகிச்சை பெறுவதாக கேள்விபட்டேன். அவரை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தேன். நாங்கள் அரசியல் எதுவுமே பேசவில்லை என்றார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications