For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்டணிக்கு இடதுசாரிகள் வந்தாலும் தா.பாவுக்கு திமுக சீட் கொடுக்குமா?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை நேற்று வரை மிகக் கடுமையாக விமர்சித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா. பாண்டியனுக்கு திமுக அணியில் சீட் கிடைக்குமா? என்பது இடதுசாரிகளிடையே எழுந்துள்ள கேள்வி.

கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இடதுசாரிகளுடன் எப்போது நட்பு பாராட்டக் கூடிய கட்சி திமுக. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் காலம் காலமாக அதிமுக அனுதாபியாக பழக்கப்பட்டவர். அதனால்தான் என்னவே அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலர் எனவும் விமர்சிக்கப்பட்டார்.

கருணாநிதி மீது கடும் தாக்கு

கருணாநிதி மீது கடும் தாக்கு

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தா. பாண்டியன், கருணாநிதி திருவாரூரில் இருக்கும்போது வருமானம் 35 ரூபாய். ஆனால் இன்று அவரது சொத்து மதிப்பு பல கோடிகள். தமிழகத்தை சேர்ந்த எத்தனையோ பேர் மத்தியில் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் தமிழகத்தின் பெயரை கெடுக்கவில்லை. ஆனால், கருணாநிதியின் குடும்பம் தமிழகத்தின் பெயரை கெடுத்துவிட்டது. 2 ஜி திருவிளையாடலை நடத்திவிட்டது என்று போட்டுத் தாக்கினார்.

வெண்ணெய் எடுப்பேன்...

வெண்ணெய் எடுப்பேன்...

அந்தக் கூட்டத்தில்தான் வெண்ணெய் திரண்டு வருகிறது.. தாழி உடைக்க பார்க்கிறார்கள்.. முழுவதும் வெண்ணெய் எடுக்காமல்விடமாட்டேன் என்றெல்லாம் தா. பாண்டியன் வீரவசனம் பேசினார்.

வெண்ணெய் எடுக்கலையே தா.பா.

வெண்ணெய் எடுக்கலையே தா.பா.

ஆனால் தாழியும் உடைந்துபோனது.. வெண்ணெய் எடுக்காமல் வெறுங்கையுடன்தான் தா. பாண்டியன் அதிமுக கூட்டணியைவிட்டு வெளியேற வேண்டி வந்தது.

இடதுசாரிகளுக்கு திமுக அழைப்பு

இடதுசாரிகளுக்கு திமுக அழைப்பு

இந்நிலையில் இடதுசாரிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று இடதுசாரிகளும் திமுக அணிக்கு செல்லக் கூடும் என கூறப்படுகிறது.

தா.பா.வுக்கு சீட் கிடைக்குமா?

தா.பா.வுக்கு சீட் கிடைக்குமா?

இடதுசாரிகள் செல்வாக்கு மிக்க சில தொகுதிகளை திமுகவும் ஒதுக்கக் கூடும் என்றே தெரிகிறது. ஆனாலும் தா. பாண்டியனுக்கு திமுக சீட் கொடுக்காது என்றே சொல்லப்படுகிறது. தா. பாண்டியன், வடசென்னையைக் கேட்பார்.. ஆனால் அதை திமுக சாக்கு போக்கி சொல்லி நிராகரித்துவிட்டு அவர்கள் விரும்புகிற வேறு தொகுதிகளை கொடுத்து சமாதானப்படுத்தும் என்கிறது அறிவாலய வட்டாரங்கள்..

தா.பா. சீட்டே கேட்கவே மாட்டார்..

தா.பா. சீட்டே கேட்கவே மாட்டார்..

அதே நேரத்தில் திமுக கூட்டணிக்கு இடதுசாரிகள் செல்வதை தா.பாண்டியன் நிச்சயம் தடுப்பார். ஒருவேளை கூட்டணி அமைந்தாலும் பாண்டியன் சீட் கேட்கவே மாட்டார். காரணம், சீட் கொடுத்தாலும் அவரை திமுக உள்குத்து வேலை பார்த்து தோற்க வைக்கும் என்றும் கூறுகிறார்கள்.

English summary
Sources said, DMK may deny the LS seat to CPI state secretary Tha. Pandian.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X