ராத்திரி எத்தனை மணியானாலும் பரவாயில்லை.. கேக்காம தூங்க மாட்டோம்..!
சென்னை: இதோ புத்துணர்ச்சியுடன் காத்திருப்பின் கிளைமேக்ஸுக்குத் தயாராகி விட்டனர் ரசிகர்கள்.. ராத்திரி எத்தனை மணியானாலும் பரவாயில்லை, கேட்காமல் தூங்க மாட்டோம் என்று கங்கனம் கட்டிக் கொண்டு பட்டி தொட்டியெங்கும் பரவசமாக காத்திருக்கிறார்கள்.
யார் இவர்கள்.. ஏன் தூங்காமல் இருக்க வேண்டும்.. அப்படி என்ன நடக்கப் போகிறது இன்று இரவு.?

இவர்கள் இளையாராஜா ரசிகர்கள்.. இன்று நள்ளிரவில்தான் தாரை தப்பட்டை படத்தின் பாடல்கள் வெளியாகின்றன. அதை விட முக்கியமாக இது இசைஞானியின் 1000மாவது படம். அது மட்டுமா. இந்தப் படத்தின் இசை குறித்த ஒரு சின்ன "பிட்" முன்பே வெளியாகி அத்தனை ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்து விட்டது.
எனவேதான் இன்று இரவு 12 மணி எப்பப்பா வரும் என்ற படபடப்போடும் பரவசத்தோடும் காத்திருக்க ஆரம்பித்துள்ளனர் ரசிகர்கள். புத்தாண்டு டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவுதான்.. ஆனால் ராஜா ரசிகர்களுக்கு இன்று இரவு 12 மணிக்குத்தான் புத்தாண்டுக் கொண்டாட்டம்.
படத்தில் மொத்தம் 2 தீம் பாட்டுகள். ஒன்று நாயகன் அறிமுக தீம். இன்னொன்று படத்துக்கான தீம் இசை. இரண்டுமே பட்டையைக் கிளப்பியுள்ளதாம்.
படத்தின் தீம் இசை தவிர்த்துப் பார்த்தால் 4 பாட்டு இருக்கிறது. வதனா வதனா வடிவேலன் பாடலை கவிதா கோபி, பிரியதர்ஷினி பாடியுள்ளனர். மோகன்ராஜ் பாடலை எழுதியுள்ளார்.
இடரினும் என்ற பாடலை இளையராஜா எழுதி, சரத் பாடியுள்ளார்.
#ThaaraiThappattai music releasing Midnight !!!Here is the tracklist.
Posted by Think Music India on Thursday, December 24, 2015
ஆட்டக்காரி மாமன் பொண்ணு என்ற பாடலையும் இளையராஜா எழுதியுள்ளார். பாடியிருப்பது மானசி மற்றும் பிரசன்னா.
இதுதவிர திருவாசகத்திலிருந்து ஒரு பாடல். அதைப் பாடியிருப்பவர்கள் சத்ய பிரகாஷ், சுருமுகி.
பிறகென்ன.. தாரை தப்பட்டையுடன் நடுராத்திரியை உலுக்கி எடுத்து விட வேண்டியதுதானே ரசிகர்களே.. !












Click it and Unblock the Notifications