தமிழகத்திற்கான உரிமை பறிபோகக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் - தம்பிதுரை
தமிழகத்திற்கான உரிமை பறிபோகக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் - தம்பிதுரை
Recommended Video

டெல்லி: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு உரிய பங்கு வரவில்லை என்ற குறை எங்களுக்கு இருக்கிறது என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
அண்ணா நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின் செய்தியார்களிடம் பேசிய அவர், பட்ஜெட்டில் தமிழகத்துக்கு உரிய பங்கு வரவில்லை என்ற குறை எங்களுக்கு இருக்கிறது என்றார். தொடர்ந்து, தமிழகத் திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதி இதுவரை வரவில்லை என்று கூறினார்.
ஜிஎஸ்டியால் தமிழகத்திற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இழப்பிற்கான நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை என்று கூறினார்.
தமிழகத்திற்கான உரிமை பறிபோகக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அதே சமயத்தில் ஒரே இந்தியா என்ற கொள்கையை எதிர்ப்பதாகவும் தெரிவித்த அவர், ஒரே நாடு என்று கூறி அதிகாரங்களை மத்திய அரசு தன்வசம் குவித்துக்கொள்வது நல்லதல்ல என்றும் கூறினார்.
அனைத்து மொழிகளையும் தேசிய மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும். அப்படிச் செய்தால் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும். தேர்தல் செலவைக் குறைக்க, லோக்சபாவிற்கும் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்றும் தம்பிதுரை கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications