முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை! இனியும் தாமதம் வேண்டாம்! அரசுக்கு தமிமுன் அன்சாரி வேண்டுகோள்!
சென்னை: முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் இனியும் தாமதம் கூடாது என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
நாகை மாவட்டம் தோப்புத்துறையில் ஈத் பெருநாள் சிறப்புத் தொழுகையில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

மேலும், அப்போது அவர் கூறியதாவது;
அன்பையும், கருணையையும் முன்னிறுத்தும் இப்பெருநாளில் தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோளை முன் வைக்கிறோம். 20 ஆண்டுகளை கடந்த அனைத்து ஆயுள் கைதிகளையும் சாதி, மத, வழக்கு பாராமல் முன் விடுதலை செய்யுங்கள். இதை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வேண்டுகிறோம்.
சமூக வழக்கு தொடர்பான 37 முஸ்லிம் கைதிகள் மற்றும் Rss சார்புடைய 4 கைதிகளையும் இதில் விடுதலை செய்யுங்கள். இப்பிரச்சனையை கருணையுடன் அணுகுங்கள்.

அவர்கள் குற்றவாளிகளா? அப்பாவிகளா? என்ற விவாதத்திற்குள் நாங்கள் வரவில்லை. 20 வருடங்களை தாண்டி, பலர் 25 வருடங்களையும் கடந்து சிறையில் வாடுகிறார்கள். இதற்கு மேலும் அவர்கள் தண்டணையை அனுபவிக்க வேண்டுமா?
எனவே இனியும் இவர்களது விடுதலையை தாமதிக்க கூடாது. தமிழக முதல்வர் அவர்கள் கருணையுடன் இவ்விஷயத்தில் நல்ல முடிவை எடுக்க வேண்டும். விரைவில் தமிழக அரசிடமிருந்து நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications