மு.க. ஸ்டாலினை சந்திக்க மோடிக்கு என்ன அவசியம் இருக்கு.. பாஜக தமிழிசை ஆவேசம்
தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை சந்திக்க பிரதமர் மோடிக்கு அவசியம் என்ன இருக்கிறது என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: எந்தவித பொறுப்பிலும் இல்லாத ஒருவரை சந்திக்கும் பிரதமர் மோடிக்கு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவரை, விவசாயிகளை சந்தித்து பேச மனம் வரவில்லை என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
அண்மையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்தார். எந்தவித பொறுப்பிலும் இல்லாத ஓபிஎஸ், சந்திக்க நேரம் கேட்டவுடன், உடனடியாக அனுமதி கொடுக்கப்பட்டு டெல்லிக்கு சென்று பிரதமரை பார்த்து விட்டு வருகிறார் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
டெல்லிக்கே சென்று ஏறக்குறைய 50 நாட்கள் போராடிய தமிழக விவசாயிகளை பிரதமர் சந்திக்கவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.

அவசியம் இல்லை
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை, ஸ்டாலினை பிரதமர் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். அரசியல் ஆதாயம் தேட ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்
விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் தமிழக அரசு கூட்டவில்லை. இதனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதாக பல முறை கூறினார். எனினும், விவசாயிகள் பிரச்சனை குறித்து ஸ்டாலின் ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுகிறார் என்றும் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல்
இரட்டை இலை சின்னத்திற்காகத்தான் உள்ளாட்சித் தேர்தலை மாநில அரசு தள்ளிப் போட்டு வருகிறது என்று தமிழிசை தமிழக அரசை குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவிற்குள் நடக்கும் சண்டையால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

ஓபிஎஸ்யுடன் கூட்டணி
உள்ளாட்சித் தேர்தலில் ஓபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று தமிழிசை ஓபிஎஸ் அணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு முன்னர் நேரடியாக எந்த அழைப்பையும் கொடுக்காத பாஜக தற்போது ஓபிஎஸ்ஸுடன் கூட்டணி வைக்க அழைப்புவிடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications