வைரவிழாவில் நிதீஷ் இந்தியில பேசினா ஏன் திமுகவினர் கை தட்டுகிறார்கள்.. தமிழிசை புத்திசாலிக் கேள்வி
திமுக தலைவர் கருணாநிதியின் சட்டசபை வைரவிழாவிற்கு வந்த நிதீஷ் குமார் இந்தியில் பேசினால் திமுகவினர் ஏன் கை தட்டுகிறார்கள் என்று தமிழசை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை அரசு மூட வேண்டும் என்று கோரி சென்னை சேப்பாக்கத்தில் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் தமிழிசை பேசியதாவது: தமிழகத்தில் டாஸ்மாக் கடை மூடும் வரை பாஜக போராட்டத்தை நடத்தும்.
பெண்கள் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடி வருகிறார்கள். தமிழக முதல்வர் உடனே இந்த பிரச்சனையை கையில் எடுக்க வேண்டும்.

மூடப்பட்ட கடைகள் எத்தனை?
சட்டசபைக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்ற கணக்கை முதல்வர் வெளியிட வேண்டும்.

மறுவாழ்வு மையங்கள்
டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக அரசு மருத்துவமனைகளில் உடனடியாக மறுவாழ்வு மையங்களை திறக்க வேண்டும். தமிழகம் தள்ளாடி கொண்டிருக்கிறது. படித்து பழக வேண்டியவர்கள் குடித்து பழகுகிறார்கள்.

இந்தி எதிர்ப்பு
திமுக இந்தியை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தி.மு.க தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் கலந்து கொண்ட நிதீஷ் குமார் இந்தியில் பேசினார். அவருடைய பேச்சிற்கு ஏன் திமுகவினர் கைத்தட்டினார்கள் என்று தமிழிசை பேசினார்.

கொடும்பாவி எரிப்பு
இந்தப் போராட்டத்தில் டாஸ்மாக் கொடும்பாவியை ஊர்வலமாக எடுத்துச் சென்று பாஜகவினர் எரித்தனர். இந்தப் போராட்டத்தில் தேசிய பொது செயளாலர் முரளிதரராவ், துணை தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications