"நல்லா தேய்ச்சேனா".. தங்க தமிழ்ச்செல்வனின் 'ஆல் ரவுண்டர்' பிரசாரம்.. எல்லோரையும் மிஞ்சிடுவார் போல..
போடி: அயர்ன் பாக்ஸ் கொண்டு துணி தேய்த்து, காய்கறி விற்பனை செய்து, உணவு விடுதியில் உணவு தயார் செய்து தி.மு.க. வேட்பாளர் தங்க.தமிழ்செல்வன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன், போடி நகர் பகுதியில் தெருத்தெருவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். போடி நந்தவனம் தெரு, காமராஜர் சாலை, பரமசிவன் கோவில் தெரு, சுப்பிரமணியசாமி கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அவர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

நந்தவனம் தெருவில் வாக்கு சேகரிக்க சென்றபோது அங்கு முதியவர் ஒருவர் அயர்ன் கடையில், துணி தேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் நலம் விசாரித்த தங்க.தமிழ்ச்செல்வன், அவரிடமிருந்து அயர்ன் பாக்ஸ் வாங்கி துணி ஒன்றை தேய்த்துக் கொடுத்தார்.
பின், காய்கறி கடையில் பெண் ஒருவர் காய்கறி விற்பதை பார்த்த தங்க தமிழ்ச்செல்வன் அவருடன் இணைந்து காய்கறி விற்பனை செய்தார்.
மேலும் ஒரு காலை நேர உணவகத்திற்கு சென்று உணவு தயார் செய்யும் தொழிலாளர்களுடன் இணைந்து உணவு தயார் செய்தார், இந்த செயல் அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது
பின்னர் அப்பகுதியில் பெண்கள், இளைஞர்களிடம் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகளை விளக்கி வாக்கு சேகரித்தார். தங்க தமிழ்ச்செல்வனுடன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.லட்சுமணன், தி.மு.க. நகர செயலர் மா.வீ.செல்வராஜ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications