தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்- தங்கதமிழ் செல்வன்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தங்கதமிழ் செல்வன் தெரிவித்தார்.
ஆண்டிப்பட்டி: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தங்கதமிழ் செல்வன் தெரிவித்தார்.
முதல்வருக்கு எதிராக நம்பிக்கை இல்லை என்று அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் 18 எம்எல்ஏக்கள் புகார் மனு அளித்தனர். இதையடுத்து அவர்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் இரு நீதிபதிகளும் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்ததால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்பட்டது.

டிடிவி கூறினார்
இதுகுறித்து ஆண்டிப்பட்டியில் தங்கதமிழ் செல்வன் கூறுகையில் நாங்களும் சட்டசபையில் சென்று இருக்க வேண்டும். தவறான வழிகாட்டுதலால் தாங்கள் தனித்து விடப்பட்டோம். தனித்தனியாக முடிவெடுத்துக் கொள்ளுமாறு டிடிவி கூறிவிட்டார்.

நியாயமான முடிவு
ஆண்டிப்பட்டி தொகுதிக்கு எந்த திட்டமும் வந்து சேரவில்லை. நம்பிக்கை துரோக ஆட்சியில் எப்போதும் சேரமாட்டேன். அரடை எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் மீது கட்சித் தாவல் சட்டம் பாயவில்லை. 3-ஆவது நீதிமன்றம் அமைத்தாலும் நியாயமான தீர்ப்பு கிடைக்காது.

வழக்கை வாபஸ் பெற
மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றங்கள் கேலிக்கூத்தாகிவிட்டது. எடப்பாடியிடம் அமைச்சர் பதவி வாங்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. ஆண்டிப்பட்டி தொகுதிக்கு எம்எல்ஏ வேண்டும் என்பதற்காக வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம்.

கட்டாயம் ஏற்பட்டுவிட்டது
மக்கள்தான் உண்மையான எஜமானர்கள். எடப்பாடி ஆட்சியின் அவலத்தை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். 18 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய வேண்டும். 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications