கேனப்பய ஊர்ல கிறுக்குபய நாட்டாமயா இருக்கே... சொல்வது தங்க தமிழ் செல்வன்
கட்சியே எங்க கிட்ட வந்த பிறகு எங்களை எப்படி நீக்க முடியும் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
சென்னை: கேனப்பய ஊர்ல கிறுக்குப் பய நாட்டாமையால்ல இருக்கு... என்று தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். தங்களை யாரும் கட்சியில் இருந்து நீக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தங்க தமிழ் செல்வன், வெற்றி வேல், உள்ளிட்ட பலரும் தினகரன் வெற்றிக்கு பாடுபட்டனர்.

இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் கூட்டம் கூடியது. அப்போது தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து டிடிவி தினகரனை ஆதரிக்கும் 6 மாவட்ட செயலாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்க ஓ.பி.எஸ், ஈபிஎஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், ரங்கசாமி, வி.பி.கலைராஜன், பார்த்திபன், முத்தையா ஆகியோரை நீக்க முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தங்க தமிழ் செல்வன், என்னா முடிவு எடுத்திருக்காங்க என்று கேட்டார். அதிமுக உயர்மட்ட குழு கூட்டம்னா என்னா என்றும் கேட்டு விட்டு சிரித்த அவர், கேனப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமையால்ல இருக்கு என்று கூறினார்.
அதிமுக கூட்டத்தில் கட்சியை விட்டு நீக்கி விட்டார்களே என்று கேட்டதற்கு, 'கேனப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமையால்ல இருக்கு' என்று சொன்னார் தங்க தமிழ் செல்வன்.
அண்ணன்தானே இனி எல்லாமே, கட்சியே எங்க கிட்ட வந்துருச்சி...அப்புறம் என்ன அவங்க எங்களை நீக்குறது என்று கேட்டுள்ளார் தங்க தமிழ் செல்வன்.
-
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications