ஓபிஎஸ் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சியில் சேர்ப்போம்.. இறங்கி வரும் சசிகலா தரப்பு!
மன்னிப்பு கடிதம் கொடுத்தால் ஒ.பி.எஸ் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என தேனி அதிமுக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
தேனி: ஓ.பன்னீர்செல்வம் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று சசிகலா தரப்பு தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டது. சசிகலாவிற்கு எதிராக சராமரி குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார் ஓ.பன்னீர் செல்வம். தான் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாகவும் கூறினார். பன்னீர் செல்வத்தின் பேட்டி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இதனையடுத்து அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளவுபட்டது. இதையடுத்து முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார்.

ஆனாலும் கட்சியினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஓபிஎஸ் ஆதரவு குறையவில்லை. மக்கள் ஆதரவு அமோகமாக இருந்தது. இந்நிலையில் மேலும் சசிகலாவின் எதிர்ப்புகளை தனக்கு சாதகமாக அறுவடை செய்ய பன்னீர்செல்வமும், தீபாவும் திட்டமிட்டு வரும் பிப்ரவரி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதனால் சசிகலா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் தேனியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன், மறப்போம், மன்னிப்போம் என்ற வகையில் ஒ.பன்னீர்செல்வம் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications