அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

தஞ்சை, அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல்கள் நடைபெற்ற தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் மறுதேர்தலும் திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியின் நெல்லித்தோப்பு ஆகியவற்றில் இடைத்தேர்தலும் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் அதிமுக, திமுக- காங்கிரஸ், தேமுதிக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

election result

மக்கள் நலக் கூட்டணி, பாமக, தமாகா ஆகியவை இத்தேர்தலை புறக்கணித்தன. கடந்த 19-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 82% வாக்குகள் பதிவாயின.

அதற்கு அடுத்தப்படியாக திருப்பரங்குன்றத்தில் 71.04% வாக்குகளும், தஞ்சையில்69.02% வாக்குகளும் பதிவாகியிருந்தன. புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதியில் மிக மிக அதிகபட்சமாக 85.76% வாக்குகள் பதிவாகின.

இங்கு காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமியும், அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகரும் போட்டியிட்டனர். 4 தொகுதி தேர்தல்களும் பொதுவாக அமைதியாக நடைபெற்றாலும் சில இடங்களில் சலசலப்பும் பதற்றமும் இருந்தது.

வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர் அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அவை வைக்கப்பட்டுள்ள மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி தொடங்கும். காலை 10 மணியளவில் முன்னணி நிலவரம் தெரியவரும் என்றும் பிற்பகலுக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+