இன்று வங்கிகளுக்கு விடுமுறை: பணம் இல்லாமல் அல்லாடிய மக்கள்
சென்னை: இன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார். அதன் பிறகு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகளுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

மோடியின் அறிவிப்பு வெளியானதில் இருந்து வங்கிகள் விடுமுறை இன்றி வார இறுதி நாட்களில் கூட செயல்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வங்கிகள் செயல்பட்டபோதும் கூட அங்கு போதிய அளவுக்கு பணம் இல்லாததால் மக்களால் பழைய நோட்டுகளை மாற்ற முடியவில்லை. நேற்று முன்தினம் பழைய நோட்டுகளை மாற்றும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டது.
நேற்று முதியவர்களுக்கு மட்டுமே வங்கிகளில் புதிய நோட்டுகள் வழங்கப்பட்டது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக மக்களால் பழைய நோட்டுகளை மாற்ற முடியவில்லை.
இந்நிலையில் இன்று வங்கிகள் செயல்படும் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என மக்கள் நினைத்தனர். ஆனால் இன்று வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
ஏடிஎம் மையங்களில் பல செயல்படவில்லை. செயல்படும் ஏடிஎம் மையங்களில் எந்த நேரம் பார்த்தாலும் நீண்ட வரிசை இருப்பதால் செலவுக்கு பணம் இல்லாமல் மக்கள் திண்டாடி வருகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications