ஈராக்கில் சிக்கித் தவித்த 46 நர்ஸுகளை பத்திரமாக மீட்டதற்கு நன்றி: மோடிக்கு விஜயகாந்த் கடிதம்
சென்னை: ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் சிக்கித் தவித்த 46 இந்திய செவிலியர்கள் பத்திரமாக நாடு திரும்ப நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இது குறித்து அவர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

ஈராக் நாட்டில் திக்ரித் நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த இந்திய செவிலியர்கள் 46 பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் வருபவர்களின் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பதறிக் கொண்டிருந்தனர்.
அந்த வேளையில், அவர்களை பத்திரமாக மீட்டுத்தரும் பொருட்டு அங்குள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, கடத்தப்பட்டிருந்த செவிலியர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்தும், சிறிதும் கால தாமதமின்றி அவர்கள் கடத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து இந்தியா வந்து சேருவதற்கு தேவையான போக்குவரத்து மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தந்த தங்களுக்கும், தங்கள் தலைமையிலான மத்திய அரசிற்கும் தேமுதிக சார்பில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications