மோடிக்கு தூக்கு கயிறு அனுப்பும் போராட்டம்.. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது
பிரதமர் மோடியை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
கோவை: 50 நாட்களுக்கு மேலாகியும் ரூபாய் நோட்டு பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடியை கண்டித்து அவருக்குத் தூக்குக் கயிறு அனுப்ப முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.
கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு 50 நாட்களில் சீராகும் என்றும் இல்லையெனில் தன்னை தூக்கில் போடுங்கள் எனவும் பிரதமர் மோடி அறிவித்தார்.

ஆனால் ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகி விட்டது. இதனால் எழுந்துள்ள பிரச்சனைகள் இன்னமும் தீரவில்லை. வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் பணத்தை எடுக்க மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இன்னும் பல இடங்களில் ஏடிஎம்கள் பூட்டிய நிலையிலேயே உள்ளது. இதனால் பொது மக்கள் தங்கள் அன்றாட செலவுகளை பெருமளவு குறைத்துகொண்டுள்ளனர். திருமணம் போன்ற விஷச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, பணத்தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காத மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பிரதமர் மோடிக்குக் தூக்கு கயிறு அனுப்பும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூக்குக் கயிறு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தூக்குக் கயிறுடன் திரண்டு வந்த அந்த அமைப்பினர், பிரதமர் மோடிக்குக் தூக்குக் கயிறை அனுப்ப முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications