Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எனக்கு கல்யாணமே ஆகலைனு சொல்லி! 40 பிளஸ் வயதினரை மாயவலையில் வீழ்த்திய தாராபுரம் சந்தியா! அதிரடி கைது

Subscribe to Oneindia Tamil

தாராபுரம்: உதவி ஆய்வாளர் முதல் சர்வேயர் வரை 15 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணை தாராபுரம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணத்திற்கு மேட்ரிமோனியில் பதிவு செய்து உறவினர்கள் பெண் தேடி வந்தனர்.

crime tharapuram police

இந்த நிலையில் இவருக்கு செல்போன் செயலி மூலம் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சந்தியா அறிமுகமானார். இவர்கள் இருவரும் வாட்ஸ் ஆப் மூலம் பேசிக் கொண்டனர். அப்போது அரவிந்திடம் , தனக்கு திருமணத்திற்கு வரன் தேடி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் தனக்கு ஒரு பெண் இடைத்தரகர் வரன் தேடி வருவதாகவும் கூறி, அந்த பெண்ணையும் சந்தியா, அரவிந்திற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதன் பிறகு இருவரும் செல்போனில் பேசி இருவரும் காதலித்து வந்தனர். அப்போது அரவிந்திடம், சந்தியா, தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை. அதனால் வீட்டில் அவசரமாக திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் கேட்டுள்ளார். இதையடுத்து கடந்த மாதம் 21 ஆம் தேதி பழனி அருகே ஒரு கோயிலில் இவர்களுடைய திருமணம் நடந்தது. திருமணத்தின் போத 12 சவரன் நகையை சந்தியாவிற்கு அரவிந்த்தின் பெற்றோர் அணிவித்தனர். ஆனால் திருமணம் நடந்த சில நாட்களிலேயே சந்தியாவின் நடவடிக்கையில் அரவிந்திற்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சந்தியா, பல ஆண்களுடன் பேசி வந்தது அரவிந்திற்கு தெரியவந்தது. ஒரு கட்டத்தில் அரவிந்த், சந்தியாவின் அடையாள அட்டையை பார்த்த போது அதில் கணவர் பெயர் என்ற இடத்தில் சென்னையை சேர்ந்த வேறு ஒருவரின் பெயர் இருந்ததும் , அந்த பெண், தன்னை விட வயது மூத்தவராக இருந்ததும் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த், சந்தியாவிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் அரவிந்தையும் அவரது குடும்பத்தினரையும் சந்தியா மிரட்டியதாக தெரிகிறது. இதனால் சுதாரித்த அரவிந்த், சந்தியாவை சமாதானம் செய்வது போல் தாராபுரம் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு போலீஸார் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்து தப்பியுள்ளார். விசாரணையில் சந்தியாவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்துவிட்டதாம். அவருக்கு ஒரு குழந்தையும் இருக்கும் நிலையில், கரூரை சேர்ந்த எஸ்ஐ, மாட்டு வியாபாரி, சர்வேயர் உள்பட 15 பேரை ஏமாற்றி சந்தியா திருமணம் செய்தது குறித்து புகார்கள் எழுந்துள்ளன.

திருமணம் செய்யும் நபர்களுடன் கணவன் , மனைவி போல் வாழும் சந்தியா, சில நாட்களில் சண்டைபோட்டுக் கொண்டு நகை, பணத்துடன் தலைமறைவாகிவிடுவாராம். இது போல் சந்தியா லட்சக்கணக்கில் பணத்தை பெற்று அதில் புரோக்கருக்கும் கமிஷன் கொடுத்தது தெரியவந்தது. இவர்களை போலீஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சந்தியாவை நேற்று கைது செய்த தாராபுரம் மகளிர் காவல் நிலைய போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+