அந்த ஒரு வார்த்தையை கேட்டு நாசமாய் போனேன்.. சிறையில் புலம்பும் அபிராமி!!

கள்ளக்காதலனின் அந்த ஒரு வார்த்தையை கேட்டு நாசமாய் போனேன் என குன்றத்தூரைச் சேர்ந்த அபிராமி புலம்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்காதலனின் அந்த ஒரு வார்த்தையை கேட்டு நாசமாய் போனேன் என குன்றத்தூரைச் சேர்ந்த அபிராமி புலம்பியுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக குன்றத்தூர் அபிராமி பற்றிய செய்திகள்தான் சமூகவலைதளங்களில் அதிகமாக வலம் வருகின்றன. பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்துடன் மலர்ந்த கள்ளக்காதலால் 2 குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்றார் அபிராமி.

காதல் கணவரையும் கொல்ல சதித்திட்டம் தீட்டியது அபிராமி அளித்த வாக்குமூலத்தில் தெரியவந்தது. சுந்தரத்துடனான கள்ள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தைகளை கொன்றதை ஒப்புக்கொண்டார் அபிராமி.

அனைத்தையும் செய்தேன்

அனைத்தையும் செய்தேன்

அவரது வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கள்ளக்காதலன் ஆலோசனைப்படியே அனைத்தையும் செய்து முடித்ததாக தெரிவித்துள்ளார் அபிராமி.

திடுக்கிடும் தகவல்கள்

திடுக்கிடும் தகவல்கள்

கடந்த சில நாட்களாக சிறையில் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்த அபிராமி தற்போது சகக்கைதிகளிடம் பேச தொடங்கியுள்ளார். இதில் பல திடுக்கிடும் தகவல்களையும் அவர் கூறி வருகிறார்.

குந்தைகளை கொன்றுவிடு

குந்தைகளை கொன்றுவிடு

உன் குழந்தைகளையும் கணவரையும் கொன்றால்தான் நாம் சந்தோஷமாக வாழ முடியும் என கள்ளக்காதலன் சுந்தரம் கூறியதை கேட்டு, என் குழந்தைகளை நானே கொன்றுவிட்டேன் என புலம்பியுள்ளார் அபிராமி.

அந்த ஒரு வார்த்தையால்

அந்த ஒரு வார்த்தையால்

சுந்தரத்தின் மீதான காதலும் தீராத வெறியும் என் கண்களை மறைத்துவிட்டது என்றும், கள்ளக்காதலன் கூறிய அந்த ஒரு வார்த்தையை நம்பி ஏமாந்து நிற்கதியாய் நிற்கிறேன் என்றும் அபிராமி சக கைதிகளிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+