ஜெ. நலம் பெற வேண்டி அப்பல்லோ முன்பு பூசணிக்காய், தேங்காய் உடைத்து அதிமுகவினர் வழிபாடு !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலாலிதா விரைவில் பூரண நலம் பெறவேண்டி அதிமுகவினர் 101 பூசணிக்காய்களை உடைத்து வழிபாடு நடத்தினர்.

முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 28 நாட்களாகிறது. தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

The ADMK cadres are performed in front of apollo hospital

இதையொட்டி அவர் பூரண குணமடைய வேண்டி அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் அப்பல்லோவுக்கு வந்து ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர்.

அப்பல்லோவிற்கு வரும் அதிமுகவினர் மருத்துவமனை முன்பு விதம் விதமான பிரார்த்தனைகளையும், சிறப்பு பூஜைகளையும் நடத்துகின்றனர். திருவள்ளூரை சேர்ந்த அதிமுக எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செயலாளர் சி.கோபாலகிருஷ்ணன் என்பவர் கையில் தீச்சட்டி ஏற்றி பிரார்த்தனை செய்தார்.

The ADMK cadres are performed in front of apollo hospital

மேலும் ஏராளமான பெண்களும் தீச்சட்டி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். அதோபோல் தேங்காய் உடைத்தும் அதிமுகவினர் வழிபாடு மேற்கொண்டனர். இந்த நிலையில் ஜெயலாலிதா விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்பதற்காக அதிமுகவினர் 101 பூசணிக்காய்களை உடைத்து வழிபாடு நடத்தினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The ADMK cadres are performed in front of apollo hospital special pooja for tamilnadu chief minister Jayalalithaa's speedy recovery, as she is hospitalised for 27 days
Please Wait while comments are loading...