தீக்குளித்து இறந்த மூவரின் உடல்களை ஒப்படைத்த போலீஸ்.. "கேஸ்" போடுவோம் என குடும்பத்தாருக்கு மிரட்டல்!
கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து உயிரிழந்த 3 பேரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நெல்லை: கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து உயிரிழந்த 3 பேரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கி முத்து என்பவர் தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தீக்குளித்தார். சமூகவலைதளங்களில் வெளியான இந்தக் காட்சி பார்ப்போரின் நெஞ்சங்களை பதற வைத்தது.

Recommended Video

இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசக்கி முத்துவின் மனைவி சுப்புலட்சுமி மற்றும் 5 வயது பெண் குழந்தை மதி சரண்யா மற்றும் 2 வயது குழந்தை அட்சய ப்ரணீதா ஆகிய மூன்று பேரும் நேற்று உயிரிழந்தனர்.
ஆபத்தான நிலையில் உள்ள இசக்கி முத்துவுக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்கு பிறகு அவர்களின் குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடல்களை வாங்கப்போவதில்லை என அவர்களது உறவினர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் போலீசார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடல்களை வாங்காவிட்டால் வழக்குப்பதிவு செய்வோட் என மிரட்டி வாங்கவைத்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications