ராமர் பாதுகை அரசாண்ட பாணி.. ஜெ. நாற்காலி முன்னிலையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு!
ராமாயண இதிகாசத்தில், ராமர் பாதுகையை வைத்து அவரது தம்பி பரதன் அரசாண்ட பாணியில் அதிமுக, ஜெயலலிதா இருக்கை முன்னிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு ஜெயலலலிதா இத்தனை காலமாக அமர்ந்த நாற்காலி கொண்டு வரப்பட்டிருந்தது.
இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த அதிமுக பொதுச் செயலர் யார் என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்டது. சசிகலாவை அப்பதவிக்கு கொண்டுவர திட்டமிட்டபடியே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனவே இந்த நிகழ்வுக்கு சென்டிமென்ட் டச் கொடுக்க அதிமுக தலைவர்கள் முடிவு செய்திருந்தனர். இதையடுத்து, இதுவரை ஜெயலலிதா பயன்படுத்திய நாற்காலி பொதுக்குழு நடைபெறும் வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்திற்கு இன்று காலை காரில் கொண்டு வரப்பட்டது.
கூட்ட மேடையில் அந்த நாற்காலி நடு நாயகமாக போடப்பட்டது. அந்த நாற்காலி மீது, ஜெயலலிதா உருவப்படம் வைக்கப்பட்டு அதற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ராமாயண இதிகாசத்தில், ராமர் பாதுகையை வைத்து அவரது தம்பி பரதன் அரசாண்ட பாணியில் அதிமுக, ஜெயலலிதா இருக்கை முன்னிலையில், சசிகலாவை அடுத்த பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்ததன் மூலம், ஜெயலலிதாவே இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications