சிறுமியை பலாத்காரம் செய்தவர்களுக்கு என்ன தண்டனை? 'மரண தண்டனை எதிர்ப்பாளர்' கமல் கூறிய பதில் இதுதான்
இவர்களுக்கு அவ்வளவு மனிதாபிமானம் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்று கமல்ஹாசன் தனது பேட்டியில் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் இவைதான்.
இதுவரை நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கைப்பற்றப்பட்ட பணமும், தங்க கட்டிகளும் என்னவாயின, ஆகிக் கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி ஒரு பேச்சும் இல்லையே என்பதுதான் எனது கேள்வி.
இந்த வருமான வரி சோதனை நமக்காகவே நடப்பதாக வைத்துக் கொள்வோம், என்ன நடக்கிறது என்பதை எங்களுக்கு அறிந்து கொள்ளும் தகவல் உரிமை உள்ளது. இது உங்கள் கடமை இல்லையா? கிணற்றில் போட்ட கல்லாக எத்தனை நாள் இருக்க முடியும்.
வருமான வரி சோதனை கண்துடைப்பு என்று சந்தேகப்படும் சூழ்நிலை வந்து விட்டது. அதை நிவர்த்தி செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை என்றார், கமல்ஹாசன்.

அடிக்க கூடாது
தமிழக அரசை மிரட்டும் முயற்சிதான் இந்த ரெய்டுகளா என்ற நிருபர்களின் கேள்விக்கு, இந்த சந்தேகத்திற்கு, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கமல்ஹாசன். 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி, சென்னை அயனாவரத்தில் பலரால் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு குறித்த நிருபர்கள் கேள்விக்கு, இத்தனை நாட்கள், இவ்வளவு காலமாக ஊடகங்களும், ஏன் நானும் கூட மெத்தனமாக இருந்துவிட்டோமோ என்ற கேள்வி உள்ளது.

அடிக்க கூடாது
மகாநதி படத்தில் இதைபோன்ற காட்சிகளை காண்பித்துவிட்டதால் கடமை முடிந்துவிட்டது என நானும் இருக்க முடியாது. தலையங்கம் எழுதிவிட்டோம் இனி என்ன செய்வது என ஊடகங்களும் இருக்க முடியாது. குடும்பத்திற்கு தெரிந்தவர்களோ, குடும்பத்தில் உள்ளவர்களோதான் இதை செய்கிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம்தான். அதற்காக தெருவில் வைத்து அடித்து கொன்றால் அது இன்னொரு கொலையாகுமே தவிர நீதிமன்றங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும்.

மனிதாபிமானம் தேவையில்லை
என்னுடைய கோரிக்கை என்பது, நீதி விரைந்து செயல்பட வேண்டும். நின்று கொல்வதெல்லாம் நீதிக்கு ஆகாது. தோலை உரித்து உப்புக்கண்டம் போட வேண்டும் என்று சொல்வதெல்லாம் புராதான விஷயம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதேநேரம், இவர்களுக்கு (குற்றவாளிகளுக்கு) அவ்வளவு மனிதாபிமானம் கொடுக்க வேண்டிய தேவையில்லை.

தமிழர்களுக்கு தலை குனிவு
மாற்றுத்திறனாளி பிள்ளை இது. தமிழர்களாக தலைகுனிவை ஏற்படுத்தும் விஷயம் இது. கடுமையான தண்டனையை, சட்டத்திற்கு உட்பட்டு நீதிமன்றம் விரைந்து தர வேண்டும். அப்போதுதான் சட்டத்தின் மீதும் நீதித்துறை மீதும் மக்களுக்கு நம்பிக்கை வரும். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார். மரண தண்டனைக்கு எதிரானவர் கமல்ஹாசன். ஆனால் இவர்களுக்கு அவ்வளவு மனிதாபிமானம் காட்ட தேவையில்லை என அவரே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications