சட்டசபை தேர்தல்: வாக்கு பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கான வாக்கு பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் சின்னம் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்து வருகிறது தேர்தல் ஆணையம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1562 வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவிற்காக பயன்படுத்தப்படும் மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ரேண்டம் முறையில் ஓதுக்கீடு செய்யப்பட்டு 6 தொகுதிகளில் உள்ள தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த மின்னனு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் வேட்பாளர் பெயர், சின்னம் உள்ளிட்ட விபரங்கள் பொருத்தப்பட்டன.
தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள மையத்தில் தூத்துக்குடி தொகுதியில் உள்ள 274 மையங்களுக்கான ஓட்டு இயந்திரங்களில் வேட்பாளர் விபரங்கள் பொருத்தப்பட்டன. மாவட்ட தேர்தல் அதிகாரி ரவிக்குமார் தலைமையில் இந்த பணி இரவு வரை நடந்தது.
இந்த இயந்திரங்கள் பாதுகாப்பாக அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மே 15ம் தேதி மதியம் முதல் வாக்கு இயந்திரங்கள் அந்தந்த வாக்கு சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதுவரை வாக்கு பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் சிசிடி கேமரா பொருத்தப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications